சென்னை:கடலூர் மாவட்டம், பண்ருட்டி தாலுகாவைச் சேர்ந்தவர் பிரவீன் குமார் (20). இவர் குன்றத்தூர் அடுத்த திருமுடிவாக்கம் சிட்கோவில் உள்ள கார் உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் வேலை செய்து வந்தார். இந்த நிலையில், 55 டிகிரி கொதிநிலையிலிருந்த சோடியம் ஹைட்ராக்சைடு கெமிக்கல் நிரப்பப்பட்ட தொட்டியில் உள்ள நீரில் சுற்றிக் கொண்டிருந்த மெஷின் பழுதாகி உள்ளது.
எனவே, அதனை தொட்டியின் மேல் ஏறி சரி செய்ய முயன்றுள்ளார். அப்போது, எதிர்பாராத விதமாக கொதி நிலையில் இருந்த சோடியம் ஹைட்ராக்சைடு தொட்டியில் பிரவீன் குமார் தவறி விழுந்ததால், அவரது உடல் முழுவதும் வெந்து போனது. இதனால் அவரின் அலறல் சத்தம் கேட்டு வந்த சக ஊழியர்கள், அவரை மீட்டு கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.