தேனி:தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே கடமலைக்குண்டில் உள்ள மூலக்கடை கிராமத்தில் லிங்கராஜ் மற்றும் நிரஞ்சனா தேவி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் அணைக்கரைப்பட்டியை சேர்ந்த பிரபாகரன் என்பவர் இவர்களுக்கு அறிமுகமாகியுள்ளார்.
கடமலைக்குண்டு காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வந்த பிரபாகரன், பணியிடம் நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுக்கிறது. இந்நிலையில் கடந்த 2021 ஆண்டு நிரஞ்சனா தேவியிடம், பிரபாகரன் தான் கஷ்டப்படுவதாக கூறி பணம் கேட்டுள்ளார்.
அப்போது நிரஞ்சனா தேவி கடையில் அடகு வைத்திருந்த 25 பவுன் தங்க நகையை மீட்டு பிரபாகரனிடம் கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் இரண்டு மாதங்களில் நகையையும் அதற்கான வட்டியையும் சேர்த்துக் கொடுத்ததாகக் கூறி வாங்கிச் சென்று, கடந்த நான்கு ஆண்டுகளாக பணத்தைத் திருப்பிக் கொடுக்காமல் ஏமாற்றி வந்துள்ளதாக தெரிகிறது.
மேலும் இதுகுறித்து அவர் பணிபுரியும் காவல் நிலையத்திற்கு சென்று கேட்டால், அவர் பணியில் இருந்து பணியில் நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்றும் அவரது வீட்டிற்கு சென்றால் அங்கு யாருமே இல்லை என்றும் தெரிவித்துள்ளனர். இதனால் தனது பணம் ஏமாற்றப்பட்டதை அறிந்த நிரஞ்சனா தேவி, நேற்று தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்குள்ளேயே தற்கொலை முயன்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து நிரஞ்சனா தேவி கூறியதாவது,"கரோனா காலத்தில் மிகவும் கஷ்டப்படுவதாக கூறி எங்களிடம் 25 சவரன் நகையை வாங்கிய பிரபாகரன், 4 ஆண்டுகள் ஆகியும் அதற்கான பணத்தைத் திருப்பி தராமல் ஏமாற்றி வருகிறார்.