பேருந்து படியில் பெண்கள் தொங்கியவாறு பயணிக்கும் காட்சி (Credit - ETVBharat TamilNadu) சென்னை:போரூர் ஜங்ஷன் என்பது கிண்டி, வடபழனி, குன்றத்தூர், பூந்தமல்லி ஆகிய நான்கு முக்கிய பகுதிகளுக்கு செல்லக்கூடிய மைய பேருந்து நிலையமாக உள்ளது. இதனால் நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் இங்கிருந்து பேருந்து மூலம் பயணம் செய்து வருகின்றனர்.
இருப்பினும், இந்த பேருந்து நிலையத்தில் போதிய பேருந்துகள் இயக்கப்படுவதில்லை என பயணிகள் குற்றம் சாட்டியுள்ளனர். இதனால் பணிக்கு செல்பவர்களும், பள்ளி கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்கள் போதிய பேருந்து இல்லாத காரணத்தால் கிடைக்கும் பேருந்துகளில் படியில் தொங்கியபடி பயணிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே போரூரில் இருந்து கூடுதலாக பேருந்துகள் இயக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
குறிப்பாக, பணிக்கு செல்லும் பெண்கள் போதிய பேருந்து இல்லாததால் படியில் தொங்கியபடி பயணிக்கும் அவலம் காணப்படுகிறது. பேருந்தில் ஏற முயற்சிக்கும் முதியவர்கள் கீழே விழும் அபாய நிலையும் உருவாகி உள்ளது. இது தவிர இளைஞர்களும், மாணவர்களும் கூட்ட நெரிசல் காரணமாக படியில் தொங்கியபடியே நீண்ட நேரம் பயணிக்கின்றனர்.
எனவே போரூர் பேருந்து நிலையத்திற்கு கூடுதலாக பேருந்துகளை இயக்க வேண்டும் என பொது மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இதே நிலைமை நீட்டித்தால், விரைவில் விபரீதமான விபத்தோ அல்லது படியில் தொங்குபவர்கள் கீழே விழும் ஆபாயமோ ஏற்படும் என அப்பகுதி மக்கள் தங்களது வேதனைகளை தெரிவிக்கின்றனர். மேலும், பெண்காள் பேருந்து படியில் தொங்கியவாறு பயணம் செய்யும் வீடியோ தற்போது வெளியாகி வேகமாக பரவி வருகிறது.
இதையும் படிங்க: ஆர்டிஇ கல்வி: பள்ளியில் இருந்து 1 கி.மீ தூரம் தாண்டி வீடு இருந்தால் சீட் மறுப்பா? உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு! - Madras High Court