வேலூர்:வேலூர் மாவட்டம்,அரக்கோணத்தைச் சேர்ந்தவர் லட்சுமி (35). திருமணம் ஆன இவர், அல்லியப்பன் தாங்கலில் உள்ள தனது தாய் வீட்டுக்கு இருசக்கர வாகனத்தில் சென்று விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்துள்ளார். அப்போது, நாகாலம்மன் நகர் அருகில் வரும் போது, சாலையின் குறுக்கே நாய் ஓடி வந்துள்ளது.
அதன் மீது மோதாமல் இருக்க, இருசக்கர வாகனத்தை திருப்பிய போது, எதிரே வந்த லாரி லட்சுமி மீது மோதியது. இந்த விபத்தில் லட்சுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனையடுத்து, விபத்து குறித்து அரக்கோணம் டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.