தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க வேண்டும்"-ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் தவெக தலைவர் விஜய் மனு! - TVK LEADER VIJAY MEETS GOVERNOR

தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் தவெக தலைவர் விஜய் மனு அளித்துள்ளார்.

ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் தவெக தலைவர் விஜய் மனு
ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் தவெக தலைவர் விஜய் மனு (Image credits-Etv Bharat Tamilnadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 30, 2024, 1:57 PM IST

சென்னை:தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் தவெக தலைவர் விஜய் மனு அளித்துள்ளார்.

சட்டம் ஒழுங்கு சீர்கேடு:தவெக தலைவர் விஜய் இன்று தாம் கைப்பட எழுதி வெளியிட்டிருந்த அறிக்கையில், அன்புத் தங்கைகளே, கல்வி வளாகம் முதற்கொண்டு, ஒவ்வொரு நாளும் தமிழ்நாட்டில் தாய்மார்கள் என்னருமைத் தங்கைகள், பெண் குழந்தைகள் என அனைத்துத் தரப்புப் பெண்களுக்கும் எதிராக நடக்கும் 'சமூக அவலங்கள், சட்டம் ஒழுங்கு சீர்கேட்டு அவலங்கள், பாலியல் குற்றங்கள் என்று பல்வேறு வன்கொடுமைகளைக் கண்டு உங்கள் அண்ணனாக மன அழுத்தத்திற்கும், சொல்லொணா வேதனைக்கும் ஆளாகிறேன்.

யாரிடம் உங்கள் பாதுகாப்பைக் கேட்பது? நம்மை ஆளும் ஆட்சியாளர்களை எத்தனை முறை கேட்டாலும் எந்தப் பயனும் இல்லை என்பது தெரிந்ததே. அதற்காகவே இந்த கடிதம். அண்ணனாகவும், அரணாகவும் எல்லா சூழ்நிலைகளிலும், நிச்சயமாக உங்களுடன் நான் உறுதியாக நிற்பேன்.எனவே, எதைப் பற்றியும் கவலை கொள்ளாமல் கல்வியில் கவனம் செலுத்துங்கள். பாதுகாப்பான தமிழகத்தைப் படைத்தே தீருவோம். அதற்கான உத்தரவாதத்தை நாம் அனைவரும் இணைந்தே விரைவில் சாத்தியப்படுத்துவோம்" எனத் தெரிவித்திருந்தார்.

இதையும் படிங்க:'திருக்குறளின் துணைக் கொண்டு எதேச்சதிகாரத்தை வெல்வோம்'- திமுக தொண்டர்களுக்கு ஸ்டாலின் கடிதம்!

மாநில அரசு கேட்கும் தொகையை வழங்க வேண்டும்:இந்த நிலையில் தவெக தலைவர் விஜய், சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்துப் பேசினார். 15 நிமிடங்கள் நீடித்த இந்த சந்திப்பின் போது ஆளுநரிடம் மனு ஒன்றையும் அளித்தார். இந்த சந்திப்பு குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள தவெக பொதுச்செயலாளர் என்.ஆனந்த், "தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் தலைமையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்துப் பேசினோம். அந்த மனுவில், 'தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க வேண்டும். அனைத்து இடங்களிலும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

ஆளுநர் ஆர்.என்.ரவியிடம், தவெக தலைவர் விஜய் அளித்த மனு (Image credits-Credits - ETV Bharat Tamil Nadu)

தமிழகம் முழுவதும் அண்மையில் பெய்த பருவமழை, பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்னும் உரிய நிவாரணம் கிடைக்கவில்லை. இந்த விவகாரத்தில் மாநில அரசு கேட்கும் நிவாரணத்தொகையை மத்திய அரசு முழுமையாக வழங்க வேண்டும்,'என்று வலியுறுத்தி உள்ளோம். எங்கள் கோரிக்கைகளைக் கேட்ட ஆளுநர் அவற்றை பரிசீலிப்பதாக கூறினார்,"என்று தெரிவித்துள்ளார்.

இந்த சந்திப்பின்போது ஆளுநருக்கு திருக்குறள் புத்தகத்தை விஜய் பரிசளித்துள்ளார், பதிலுக்கு ஆளுநர், விஜய்க்கு பாரதியார் கவிதைகள் புத்தகத்தை வழங்கியுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details