தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மஞ்சளாறு அணையின் நீர்வரத்து 313 கன அடியாக உயர்வு - விவசாயிகள் மகிழ்ச்சி! - Manjalar Dam - MANJALAR DAM

Manjalar Dam: நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கோடை மழையால் மஞ்சளாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்து தற்போது 313 கன அடியாக உயர்ந்துள்ளது.

மஞ்சளாறு அணை புகைப்படம்
மஞ்சளாறு அணை புகைப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 11, 2024, 3:22 PM IST

தேனி:பெரியகுளம் அருகே உள்ள மஞ்சளாறு அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் கடந்த மூன்று மாதங்களாக மழைப்பொழிவு முற்றிலும் இல்லாமல் போனதால், கடந்த இரண்டு மாதங்களாக அணை வறண்டு காணப்பட்டது.

இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களாக அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான பாலமலை, பண்ணைக்காடு, பெருமாள் மலை, வடகர பாறை உள்ளிட்ட பகுதிகள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்த கோடை மழையால் அணைக்கு நீர்வரத்து வரத் துவங்கியது. மேலும், நேற்று இரவு பெய்த கன மழையால் அணைக்கு வரும் நீர்வரத்து அதிகரித்து, இன்று காலை நிலவரப்படி 313 கன அடி நீர்வரத்து உயர்ந்துள்ளது.

அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பால், அணையின் நீர்மட்டம் 40.50 அடியில் இருந்து, 2 அடி உயர்ந்து 42.50 அடியாக உயர்ந்துள்ளது. மேலும், கோடை மழை பெய்ய வாய்ப்பு உள்ள நிலையில், அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும், தற்போதைய அணையின் நீர்மட்டம் 42.50 (57) அடியாகவும், நீர்வரத்து 313 கன அடியாகவும் உள்ளது. நீர் வெளியேற்றம் இல்லாமல் உள்ளது. தற்போது அணையின் மொத்த நீர் இருப்பு 219.03 மில்லியன் கன அடியாக உள்ளது.

இதையும் படிங்க:ஜெகதாப்பட்டினம் புதிய மீன்பிடித் துறைமுகம்; திட்ட அறிக்கையைத் தாக்கல் செய்ய ஒப்பந்தம் கோரியது தமிழக அரசு! - JAGADAPATTINAM NEW PORT

ABOUT THE AUTHOR

...view details