விருதுநகர்:விருதுநகர் மாவட்டம் வச்சக்காரப்பட்டியில் முருகேசன் என்பவருக்கு சொந்தமான தாளமுத்து பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த ஆலை நாக்பூர் வெடிபொருள் கட்டுப்பாட்டு துறை அனுமதி பெற்றது. இந்த ஆலையில் பட்டாசுக்கான ரசாயன மூலப் பொருட்களை கலவை செய்யும் போது ஏற்பட்ட உராய்வு காரணமாக பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது.
இதில் 3 அறைகள் வெடித்து சிதறி தரைமட்டமானது. இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த தீயணைப்புத் துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து நீண்ட நேரம் போராடி காயமடைந்தவர்களை மீட்டனர். இந்த விபத்தில் அறையில் பணியாற்றிய முதலிப்பட்டியை சேர்ந்த வீரகுமார், கன்னிசேரி புதூரை சேர்ந்த காளிராஜ் ஆகிய இருவர் சம்பவ இடத்திலேயே உடல் கருகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டனர்.
இதையும் படிங்க: தூத்துக்குடி - மைசூர் எக்ஸ்பிரஸ் நாமக்கல் வழியாக இயக்கப்படுமா? - தென் மாவட்ட பயணிகள் எதிர்பார்ப்பு!