தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

முதலமைச்சர் மாநில விளையாட்டு விருது..விண்ணப்பிப்பது எப்படி? - முழு விவரம் இதோ!

முதலமைச்சர் மாநில விளையாட்டு விருதுக்கான விண்ணப்பப் படிவம் மற்றும் விரிவான விதிமுறைகள் தமிழ்நாடு விளையாட்டு ஆணையத்தின் www.sdat.tn.gov.in என்ற இணையதளம் மூலம் பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

SDTA லோகோ மற்றும் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர்
SDTA லோகோ மற்றும் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் (Photo Credit - ETV Bharat and SDTA X Page)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 9, 2024, 10:11 PM IST

விழுப்புரம்:ஆண்டுதோறும் பன்னாட்டு அளவிலும், தேசிய அளவிலும் பதக்கங்கள் பெற்று சிறந்து விளங்கும் 2 ஆண்கள் மற்றும் 2 பெண்கள் விளையாட்டு வீரர்கள், 2 சிறந்த பயிற்றுநர்கள், 2 சிறந்த உடற்கல்வி இயக்குநர் / உடற்கல்வி ஆசிரியர்களுக்கு, முதலமைச்சர் மாநில விளையாட்டு விருது பரிசாக தலா ரூ.1.00 லட்சம், ரூ.10,000 மதிப்பிலான தங்கப் பதக்கம் மற்றும் பாராட்டுப் பத்திரம் ஆகியவற்றை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை வழங்கி வருகிறது.

விருது ஆண்டுக்கு முந்தைய மூன்று ஆண்டுகள் விளையாட்டில் சாதனைகள் படைத்த விவரங்களைச் சமர்ப்பித்தல் வேண்டும். இது தவிர, விளையாட்டுப் போட்டிகளை நடத்தும் ஒரு நடத்துநர் / ஒரு நிர்வாகி / ஒரு ஆதரவளிக்கும் நிறுவனம் மற்றும் ஒரு நன்கொடையாளர் (ரூ.10.00 லட்சத்திற்கும் அதிகமாக நன்கொடை அளித்தவர்) / ஒரு ஆட்ட நடுவர் / நடுவர் / நீதிபதி ஆகியோர்களுக்கு முதலமைச்சர் மாநில விளையாட்டு விருது ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படுகிறது. இவர்களுக்கு மேற்கண்ட விருதிற்கு ரூ.10,000-க்கு மிகாமல் ஒரு தங்கப் பதக்கமும், ஒரு பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்படுகிறது. இவர்களுக்கு விருது வழங்குவதற்கு முந்தைய இரண்டு வருட செயல்பாடுகள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.

  • தமிழ்நாட்டில் 3 ஆண்டுகளாக வசித்து வரும் தமிழ்நாட்டிற்காக இரண்டு முறை தமிழ்நாடு அணியின் சார்பாக கலந்து கொண்டு இந்தியாவின் சார்பாக விளையாடியவர்கள் தகுதி பெறுவர்.
  • இந்தியாவின் சார்பாக கலந்து கொண்ட தமிழ்நாட்டில் பணியின் நிமித்தம் குறைந்தது 5 ஆண்டுகளாக வசித்து வரும் முப்படை, ரயில்வே, காவல், அஞ்சல் மற்றும் தொலைத் தொடர்புத் துறை மற்றும் இதர துறைகளில் பணிபுரிபவர்கள் விண்ணப்பிக்கத் தகுதி பெறுவர்.
  • இரண்டாவது முறையாக ஒரு நபருக்கு இவ்விருது வழங்கப்பட மாட்டாது.
  • ஒருவர் இறக்கும் பட்சத்திலும், இவ்விருது வழங்கப்படும்.
  • விருதிற்கு முந்தைய 3 ஆண்டுகளில் விளையாட்டில் பெற்ற சிறந்த வெற்றிகளை இவ்விருதிற்காக கருத்தில் கொள்ளப்படும்.
  • விளையாட்டு வீரர்கள் / வீராங்கனைகள் தங்களது சான்றிதழ்களின் நகல்களை சான்றொப்பத்துடன் இணைத்தல் வேண்டும்.

விளையாட்டுப் போட்டிகளின் பட்டியல்கள் :இதில்ஒலிம்பிக் போட்டிகள், காமன் வெல்த் விளையாட்டுப் போட்டிகள் மற்றும் மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறையினால் அங்கீகரிக்கப்பட்ட தேசிய விளையாட்டு ஆணையம் நடத்தும் தேசிய வாகையர் போட்டிகள் உள்ளிட்டவைகள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். அழைப்புப் போட்டிகள் மற்றும் மண்டலங்களுக்கு இடையேயான போட்டிகள் கருத்தில் எடுத்துக் கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ்: 3.5 புள்ளிகளுடன் அர்ஜுன் எரிகைசி முதலிடம்!

முதலமைச்சர் மாநில விளையாட்டு விருதுக்கான விண்ணப்பங்கள் :இத்திட்டத்தின்படி, 2022-2023 ஆண்டிற்கான (காலம் - 01.04.2019 முதல் 31.03.2022 வரை) 2023-2024 ஆண்டிற்கான (காலம் - 01.04.2020 முதல் 31.03.2023 வரை) முதலமைச்சர் மாநில விளையாட்டு விருதுக்கான விண்ணப்பங்கள் தலைசிறந்த விளையாட்டு வீரர்கள் / வீராங்கனைகள், பயிற்றுநர்கள், உடற்கல்வி இயக்குநர் / உடற்கல்வி ஆசிரியர் / விளையாட்டுப் போட்டிகளை நடத்தும் நடத்துநர் / ஒரு நிர்வாகி / ஒரு ஆதரவளிக்கும் நிறுவனம் மற்றும் ஒரு நன்கொடையாளர் / ஒரு ஆட்ட நடுவர் / நடுவர் / நீதிபதி ஆகியோர் இவ்விருதிற்கு விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பங்கள் அடங்கிய உறையின் மேல் "முதலமைச்சர் மாநில விளையாட்டு விருதுக்கான விண்ணப்பம்" என்று எழுதப்பட்டிருக்க வேண்டும். மேற்படி விருதுக்கான விண்ணப்பங்கள் பூர்த்தி செய்து 11.11.2024-க்குள் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் விழுப்புரம் என்ற முகவரிக்கு அனுப்பி வைத்தல் வேண்டும்.

மேற்கண்ட விருது தொடர்பாக இதர விபரங்களை மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் அலுவலக வேலை நாட்களில் நேரிலோ, அல்லது தொலைப்பேசியிலோ 7401703485 என்ற எண்ணை தொடர்புக்கொண்டு விபரம் பெற்றுக்கொள்ளலாம் என விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பழனி தகவல் தெரிவித்துள்ளார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits- ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறியஇங்கே க்ளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details