தென்காசி: தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே உள்ள பாரதியார் நகரில் வசித்து வருபவர் கடற்கரை. இவர் சங்கரன்கோவில் அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் டிக்கெட் பரிசோதகராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில், நேற்று (மே 7) இரவு அவரது இல்லத்தில் சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்துள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாகப் பாம்பு ஒன்று வீட்டுக்குள் புகுந்துள்ளது.
பாம்பு வீட்டுக்குள் வருவதைக் கண்ட சிறுவர்கள் அலறி அடித்து வீட்டுக்குள் ஓடியுள்ளனர். இதனைத் தொடர்ந்து டிக்கெட் பரிசோதகர் கடற்கரை, சங்கரன்கோவில் பாம்பு பிடி வீரர் பரமேஸ்வரதாஸுக்கு தகவல் கொடுத்துள்ளார். அந்த தகவலின் அடிப்படையில் விரைந்து வந்த பாம்பு பிடி வீரர் பரமேஸ்வரதாஸ் அந்த வீட்டில் தீவிரமாகத் தேடியுள்ளார். அப்போது வீட்டில் உள்ள மின் மோட்டார் அருகே சுமார் 5 அடி நீளமுள்ள சாரை பாம்பு ஒளிந்திருந்துள்ளது.