வேலூர்: வேலூர் என்று சொன்னாலே வெய்யலூர் என்று சொல்வார்கள். அதற்கேற்றார் போல், கோடை காலத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. பொதுவாகவே, வேலூர் மாவட்டத்தைப் பொறுத்தவரை, ஏப்ரல், மே காலங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். ஆனால். வேலூரில் பிப்ரவரி மாதத்திலையே வெயிலின் தாக்கம் துவங்கி விட்டது.
அந்த வகையில், வேலூரில் கடந்த 10 நாட்களாக 100 டிகிரி முதல்106 டிகிரி பாரன்ஹீட் என தினமும் வெப்பத்தின் அளவு உயர்ந்து கொண்டே வருகிறது. இதன் காரணமாக, காலை 12 மணி முதல் மாலை வரை மாவட்டத்தில் முக்கிய சாலைகள் அனைத்தும் வெறிச்சோடி காணப்படுகின்றன.