சென்னை: பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் நேற்றிரவு மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இது தொடர்பாக தற்போது வரை 8 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதாக சென்னை வடக்கு மண்டல கூடுதல் ஆணையர் அஸ்ரா கார்க் தெரிவித்துள்ளார்.
மேலும் இச்சம்பத்துக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை, தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் மற்றும் பாமக தலைவர் அன்புமணி, விசிக தலைவர் திருமாவளவன், மமக தலைவர் ஜவாஹிருல்லா உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் தங்களது இரங்கலை தெரிவித்துள்ளனர். மேலும், இந்த சம்பவத்திற்கு தங்களது கடுமையான கண்டனங்களையும் தெரிவித்து உள்ளனர்.