தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மறைந்த விக்கிரவாண்டி எம்எல்ஏ புகழேந்தியில் உடலுக்கு திருமாவளவன் அஞ்சலி! - Vikravandi MLA pugazhenthi

Vikravandi MLA pugazhenthi: உடல்நலக்குறைவால் உயிரிழந்த விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் புகழேந்தியின் உடலுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் நேரில் அஞ்சலி செலுத்தினார்.

Thirumavalavan Tributes MLA Pugazhendhi
Thirumavalavan Tributes MLA Pugazhendhi

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 7, 2024, 9:46 AM IST

Updated : Apr 7, 2024, 11:25 AM IST

Thirumavalavan Tributes MLA Pugazhendhi

விழுப்புரம்: விழுப்புரம் அடுத்த விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினரும், விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக செயலாளராகவும் இருந்து வந்தவர், புகழேந்தி. இவர், கடந்த 20 நாட்களாக கல்லீரல் பாதிப்பு ஏற்பட்டு சென்னையில், சிகிச்சை பெற்று வந்தார்.

இதனிடையே, கடந்த ஏப்ரல் 5ஆம் தேதி விக்கிரவாண்டி பகுதியில் நடைபெற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்ட தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார். அப்போது அக்கூட்டத்தில் திடீரென மயக்கம் அடைந்ததை அடுத்து விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

பின்னர் அருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், கூடுதல் சிகிச்சைக்காக சென்னையில் இருந்து மருத்துவக்குழு வரவழைக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின. அதன் பின்னர், தீவிர சிகிச்சை பெற்று வந்த புகழேந்தி நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அதன் பின்னர் மறைந்த விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் புகழேந்தியில் உடல் விழுப்புரத்தில் உள்ள கலைஞர் அறிவாலயத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. இதனிடையே, அரசியல் கட்சித் தலைவர்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.

இந்த நிலையில் நேற்றிரவு, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் புகழேந்தியில் உடலுக்கு நேரில் சென்று மரியாதை செலுத்தினார்.‌ அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், "புகழேந்தியின் மறைவு அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது. திமுகவில் கிளை செயலாளராக தனது அரசியல் பயணத்தை துவக்கி, தனது அயராத உழைப்பினால் சட்டமன்ற உறுப்பினராகவும், திமுகவின் விழுப்புரம் தெற்கு மாவட்ட செயலாளராகவும் உயர்ந்தவர், இவர்.

இவர் கட்சியில் உள்ள அனைவருக்கும் எடுத்துக்காட்டாக விளங்கக் கூடியவர். மேலும், விக்கிரவாண்டி இடைத்தேர்தலின் போது அவருடன் பழக வாய்ப்பு கிடைத்தது. அவர் எளிமையாக பழகக்கூடியவர், முற்போக்கு சிந்தனை கொண்டவர். மேலும், தலைமைக்கு கட்டுப்பட்டு மக்கள் தொண்டாற்றியவர்.

அவரது இழப்பு விழுப்புரம் மாவட்ட திமுகவிற்கும், குறிப்பாக அமைச்சர் பொன்முடிக்கும் பேரிழப்பாகும். மேலும், அவரது இழப்பு தோழமை இயக்கங்களுக்கும் பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், கட்சியினருக்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ஆழ்ந்த இரங்கல்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:விக்கிரவாண்டி எம்.எல்.ஏ புகழேந்தி உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி!

Last Updated : Apr 7, 2024, 11:25 AM IST

ABOUT THE AUTHOR

...view details