தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திமுக தேர்தல் அறிக்கையில் மேகதாது அணை.. வாட்டாள் நாகராஜ் ஆர்ப்பாட்டம்! - Vatal Nagaraj condemn DMK

Vatal Nagaraj: மேகதாது அணை கட்டும் முயற்சி நிறுத்தப்படும் என்ற திமுகவின் தேர்தல் அறிக்கையைக் கண்டித்து, கர்நாடக எல்லையில் ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை மறியலில் ஈடுபட்ட வாட்டாள் நாகராஜ் உள்ளிட்ட 50 பேரை போலீசார் கைது செய்தனர்.

திமுக தேர்தல் அறிக்கையை கண்டித்து கர்நாடக எல்லையில் வாட்டாள் நாகராஜ் சாலை மறியல்
திமுக தேர்தல் அறிக்கையை கண்டித்து கர்நாடக எல்லையில் வாட்டாள் நாகராஜ் சாலை மறியல்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 24, 2024, 6:59 PM IST

கிருஷ்ணகிரி: நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தமிழ்நாட்டில் முதற்கட்டமாக நடைபெற உள்ளது. இதற்காக அரசியல் கட்சிகள் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையில், நாடாளுமன்றத் தேர்தலுக்கான அறிக்கையை திமுக வெளியிட்டது.

அதில், உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேகதாது அணை கட்டும் முயற்சி நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. டெல்டா பகுதி விவசாயிகளின் நலனை காக்கவும், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு தண்ணீர் வழங்கவும், மேகதாது அணை கட்டுவதற்கு எதிராக உறுதியான சட்ட நடவடிக்கையை திமுக எடுக்கும் எனவும் அதில் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், திமுகவின் இந்த தேர்தல் அறிக்கையை கண்டித்து, ‘கன்னட சலுவாலி வட்டாள் பக்‌ஷா அமைப்பின் தலைவர் வாட்டாள் நாகராஜ் தலைமையில், 50க்கும் மேற்பட்டோர் கர்நாடக மாநில எல்லையான அத்திப்பள்ளி முதல் முழக்கங்களை எழுப்பியவாறு, தமிழ்நாட்டின் எல்லையான ஓசூர் அடுத்த ஜூஜூவாடி சோதனைச் சாவடி வழியாக தமிழ்நாட்டிற்குள் நுழைய முயன்றுள்ளனர். இதையடுத்து, கர்நாடக மாநில போலீசார் வாட்டாள் நாகராஜ் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோரைத் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.

இது குறித்து கன்னட சலுவாலி வட்டாள் பக்‌ஷா அமைப்பின் தலைவர் வாட்டாள் நாகராஜ் கூறுகையில், ”எம்ஜிஆர், கருணாநிதி முதல் தமிழ்நாடு அரசியலில் மேகதாது குறித்து பேசி அரசியல் செய்து வருகின்றனர். கர்நாடக மாநிலம் பெங்களூர் உள்ளிட்ட மாவட்ட மக்கள் குடிநீருக்காக ஏங்கி நிற்கும் சூழலில், தமிழ்நாட்டிற்கு காவிரி நீர் தர முடியாது. தமிழ்நாட்டிற்கு காவிரி நீர் வேண்டுமானால், கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் உள்ள தமிழர்களை தமிழகத்திற்கு அழைத்துச் செல்லுங்கள்” என்றார்.

இதையும் படிங்க:அதிமுகவின் 40 வேட்பாளர்களும் ஒரே மேடையில்..திருச்சியில் பிரசாரத்தை துவங்குகிறார் எடப்பாடி பழனிசாமி - Edappadi K Palaniswami

ABOUT THE AUTHOR

...view details