தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

35 ஆண்டுகளுக்கு பிறகு இலங்கை திரும்பிய முருகன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ்.. நளினி லண்டன் செல்வதில் தாமதம் ஏன்? - rajiv gandhi assassination case - RAJIV GANDHI ASSASSINATION CASE

rajiv gandhi murder case: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்ட நளினியின் கணவர் முருகன், ஜெயக்குமார் மற்றும் ராபர்ட் பயஸ் ஆகியோர் 35 ஆண்டுகள் பிறகு சொந்த நாடான இலங்கைக்கு இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டனர்.

rajiv gandhi assassination case
rajiv gandhi assassination case

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 3, 2024, 1:02 PM IST

rajiv gandhi assassination case

சென்னை: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 32 ஆண்டுகளாக சிறையில் இருந்த பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி, ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகிய 7 பேரும் 2022ம் ஆண்டு உச்சநீதிமன்றத்தால் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டனர். இதில் பேரறிவாளன், நளினி, ரவிச்சந்திரன் ஆகிய மூவரும் இந்தியர்கள். நளினியின் கணவர் ஸ்ரீஹரன் என்ற முருகன், சாந்தன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ் ஆகிய 4 பேரும் இலங்கையைச் சேர்ந்தவர்கள்.

பேரறிவாளன், நளினி, ரவிச்சந்திரன் ஆகிய மூவரும் இந்தியர்கள் என்பதால் அவர்களை அவர்களது வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். ஆனால், இலங்கையை சேர்ந்த முருகன், சாந்தன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ் ஆகிய 4 பேரும் திருச்சியில் உள்ள சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டனர். இவர்களில் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த பிப்ரவரி 28ம் தேதி சாந்தன் உயிரிழந்தார்.

இந்த நிலையில், நளினி அவரது கணவர் முருகன் ஆகியோர், அடையாள அட்டை கோரி உயர் நீதிமன்றத்தில், "லண்டனில் உள்ள மகளுடன் வசிப்பதற்கு விசா எடுக்க புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை வழங்கும்படி கடந்த ஜனவரி மாதம் மறுவாழ்வு இயக்குனரிடம் விண்ணப்பித்தும் இன்னும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவே, அடையாள அட்டை வழங்க உத்தரவிட வேண்டும்” என்று நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் முன்பு விசாரணைக்கு வந்தபோது முருகன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ் ஆகியோருக்கு இலங்கை துணை தூதரகம் பாஸ்போர்ட் வழங்கி உள்ளதாக உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்தது. 3 பேரையும் இலங்கைக்கு அனுப்பி வைக்க அனுமதி கோரி ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது.

அனுமதி கிடைத்தவுடன் மூவரும் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என்றும் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், பாஸ்போர்ட் வழங்கப்பட்டுள்ள நிலையில் அடையாள அட்டை தேவையில்லை என கூறி வழக்கை தள்ளுபடி செய்து இருந்தனர்.

35 ஆண்டுகளுக்கு பின் தாயகம்: இந்த நிலையில், இன்று சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து இலங்கை செல்வதற்காக திருச்சியில் இருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் முருகன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் அழைத்து வரப்பட்டனர். இவர்களுடன் சேர்ந்து அவரது தரப்பு வழக்கறிஞர் புகழேந்தியும் இலங்கைக்கு புறப்பட்டார். முன்னதாக, கணவர் முருகனை வழியனுப்புவதற்காக நளினி மற்றும் அவரது உறவினர்கள் சென்னை விமான நிலையம் வந்திருந்தனர்.

அப்போது செய்தியாளர்களை சந்தித்த வழக்கறிஞர் புகழேந்தி பேசுகையில், "ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு கிட்டத்தட்ட 32 ஆண்டுகள் சிறையில் இருந்து வந்த முருகன், ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ் ஆகிய மூவரும் உச்ச நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டு சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டனர்

2022ம் ஆண்டு நவம்பர் 12ம் தேதி முதல் முருகன், ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ், சாந்தன் ஆகிய நான்கு பேரும் சிறப்பு முகாமில் இருந்தார்கள். கடந்த மாதம் சிறப்பு முகாமில் இருந்த சாந்தன் உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். மற்ற மூவரும் தங்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டனர். ஆனால் அவர்கள் வெளிநாட்டு செல்ல பாஸ்போர்ட் வழங்காமல் இலங்கை துணை தூதரகம் இலங்கைக்கு செல்வதற்கான பாஸ்போர்ட் வழங்கியது.

அதன் அடிப்படையில் இந்த மூவரும் கிட்டத்தட்ட 35 ஆண்டுகளுக்குப் பிறகு அவர்கள் தாய் மண்ணை நோக்கி செல்கின்றனர். இந்திய அரசும், தமிழக அரசும் இலங்கை செல்வதற்கான உத்தரவை வழங்கியுள்ளது. அதன் அடிப்படையில் சென்னை விமான நிலையத்தில் இருந்து காலை 10 மணிக்கு ஸ்ரீலங்கன் ஏர்வேஸ் விமானத்தில் இருந்து கொழும்பு செல்கின்றனர். அங்கிருந்து அவர்களது உறவினர்களை மற்றும் குடும்பத்தில் சந்திக்க போகின்றனர்.

இலங்கையில் அவர்கள் எந்த ஒரு குற்றமும் செய்யவில்லை, இந்தியாவில் அவர்கள் குற்றம் செய்தார்கள் என்பதற்காக தண்டனை கொடுக்கப்பட்டது. நளினி லண்டன் செல்வதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. இலங்கை செல்வதற்கான தற்காலிக பாஸ்போட்டில் தான் இவர்கள் மூவரும் செல்கின்றனர், அந்த பாஸ்போர்ட்டில் இலங்கை மட்டுமே செல்ல முடியும்.

இலங்கை சிட்டிசன்ஷிப் என்பதால் அங்கிருந்து அவர்கள் மற்ற நாடுகளுக்குச் செல்ல தனி பாஸ்போர்ட் எடுத்துக் கொள்ளலாம். நளினி லண்டன் செல்வதற்காக விண்ணப்பம் அளித்துள்ளனர். பிரிட்டிஷ் அரசாங்கம் நளினியின் விண்ணப்பத்தை பரிசீலனை செய்து வருகின்றனர், விரைவில் நளினி லண்டன் செல்வதற்கான அனுமதியை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது” என்றார்.

பின்னர், நளினி லண்டன் செல்வதற்கு தாமதம் ஏன் என்ற கேள்விக்கு பதிலளித்தவர், "இவர்கள் மூவரும் இலங்கை நாட்டுக்கு செல்கின்றனர். ஆனால் நளினி தனது மகளுடன் சேர்ந்து வாழ்வதற்காக லண்டன் செல்ல இருக்கிறார்கள். டிராவல்ஸ் விசாவில் நளினி சென்றால் பரவாயில்லை அவர்கள் அங்கே தங்கி வாழலாம் என்று முடிவு எடுத்து இருக்கிறார்கள். அதன் அடிப்படையில் அந்த அரசு பல்வேறு விதிமுறைகள் விதித்துள்ளதால் அந்த விதியை பின்பற்றி தான் செயல்பட முடியும்" என்றார்.

இதையும் படிங்க: "இந்திய ஜனநாயகத்தை உடைக்க விட்டுவிடாதீர்கள்" - மதுரை தேர்தல் களத்தில் நடிகை ரோகிணி அளித்த சிறப்பு பேட்டி! - Lok Sabha Election 2024

ABOUT THE AUTHOR

...view details