தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மத்திய அமைச்சர் அமித்ஷாவின் தமிழக பயணம் திடீர் ரத்து! என்ன காரணம்? - Amit shah tn visit cancel - AMIT SHAH TN VISIT CANCEL

Amit shah tn visit cancel: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் தமிழக பயணம் ரத்து செய்யப்பட்டு உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. திடீர் உடல்நலக் கோளாறு காரணமாக பயணம் ரத்து செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 3, 2024, 7:33 PM IST

Updated : Apr 6, 2024, 12:19 PM IST

டெல்லி :மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, ஏப்ரல் 4 மற்றும் ஏப்ரல் 5 ஆகிய தேதிகளில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து தமிழகத்தில் பிரசாரம் மேற்கொள்ள இருந்தார். இந்நிலையில், உடல்நலக்குறைவு காரணமாக, அமித் ஷாவின் சுற்றுப்பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்ய இரண்டு நாள் சுற்றுப்பயணமாக நாளை (ஏப்.4) தமிழ்நாட்டிற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தருவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. தேனி, மதுரை, ராமநாதபுரம், தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து வாகனப் பேரணி நிகழ்ச்சி மற்றும் பிரசாரம் செய்வதற்காக விமானம் மூலம் மதுரை விமான நிலையத்திற்கு வருகை தந்து அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் நாளை தேனி மாவட்டத்திற்கு வருகை தருவதாக கூறப்பட்டிருந்தது.

இதற்காக தேனி வடபுதுபட்டியில் உள்ள தனியார் கல்லூரியில் ஹெலிகாப்டர் தரை இறங்குவதற்கான ஹெலிபேட் அமைக்கப்பட்டு, போக்குவரத்து மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு இருந்தன. மேலும் தேனி ரயில்வே கேட் அருகில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியில் இருந்து பங்களாமேடு வரை சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் இரும்புக் கம்பிகளால் சாலையோரம் தடுப்புகள் அமைக்கப்பட்டு தொண்டர்கள் அதன்பின் நின்று வாகன பேரணி நிகழ்ச்சி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

மேலும் அமித்ஷாவின் கான்வே வாகனம் செல்வது போன்றும் போலீசார் ஒத்திகை பார்த்தனர். இந்நிலையில் உடல்நலக் குறைவு காரணமாக அமித்ஷாவின் தமிழக பயணம் ரத்து செய்யப்பட்டதாக பாஜக தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் அமித்ஷாவின் அடுத்த கட்ட பயணம் குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என பாஜக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க :"விவிபேட் பயன்படுத்தும் முறை மாற்றம்; 2% தவறான வாக்குப்பதிவுக்கு வாய்ப்பு" - ஆர்.எஸ்.பாரதி அளித்த விளக்கம் என்ன? - Lok Sabha Election 2024

Last Updated : Apr 6, 2024, 12:19 PM IST

ABOUT THE AUTHOR

...view details