விழுப்புரம்:தமிழ் சினிமா முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநாடு இன்று விக்கிரவாண்டி அருகே உள்ள வி.சாலையில் நடைபெறுகிறது. மாநாட்டின் தொடக்கமாக கட்சித் தலைவர் விஜய் கொடியேற்றுவதற்காக 100 அடி உயர கொடிக்கம்பமும் அமைக்கப்பட்டது.
கொடிக்கம்பம் தான் ஸ்பெஷல்:இந்த கொடிக்கம்பத்தில் 20க்கு 30 என்ற அளவில் 600 சதுர அடி பரப்பளவு கொண்ட பிரமாண்ட கொடியை கட்சி தலைவர் விஜய் ஏற்றி வைத்தார். இந்த கொடிக்கம்பமானது மாநாட்டுத் திடலை நோக்கி வரும் போதே கொடிதான் முதல் அட்ராக்ஷனாக இருக்கும் என தவெக நிர்வாகிகள் கூறுகின்றனர்.
இதையும் படிங்க:தவெக மாநாடு: வெளுக்கும் வெயில்.. ஒவ்வொரு முகாம்களிலும் 50 பேருக்கு சிகிச்சை..! ஸ்தம்பிக்கும் வி.சாலை..
இந்த கொடிக்கம்பத்தின் சிறப்பு குறித்து ஈடிவி பாரத்துடன் பேசிய த.வெ.க. நிர்வாகி ஒருவர் கூறுகையில், “இக்கொடிக்கம்பம் நிறுவுவதற்காக கான்கிரீட் தளம் அமைக்கப்பட்டுள்ளது. விஜயின் பனையூர் கட்சி அலுவலகத்தில் ஏற்கெனவே 40 அடி உயர கொடிக்கம்பம் நிறுவப்பட்டுள்ளது. இந்நிலையில் அதே தனியார் நிறுவனம் தான் இந்த கொடியை நிறுவும் பணியையும் ஏற்றுக் கொண்டுள்ளது. இந்த பிரம்மாண்ட கொடிகம்பத்தை ராட்சத கிரேன் மூலம் தற்போது தூக்கி நிறுத்தப்பட்டுள்ளது” என்றார்.
டிஜிட்டல் முறையில் இயங்கும் கொடி:மேலும் பேசிய அவர், “இந்த கொடியின் பிரமாண்டத்தை கருத்தில் கொண்டு தானியங்கி ரிமோட் அமைக்கப்பட்டுள்ளது. கொடி கீழிருந்து மேலே ஏறுவதற்கு 10 நிமிடங்கள் ஆகும். குறைந்த பட்சம் 25 வருடங்களாவது துருப்பிடிக்காத வகையில் கொடிக்கம்பம் தயாரிக்கப்பட்டுள்ளது. அடுத்த 5 வருடங்களுக்கு இந்த கொடிக்கம்பம் இதே இடத்தில் இருக்கும் வகையில் நிலத்தின் உரிமையாளரான விவசாயி மணி என்பவருடன் த.வெ.க. சார்பில் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது” என்றார்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறியஇங்கே க்ளிக் செய்யவும்