தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

“இன்று ஜெயலலிதா இருந்திருந்தால் என்கவுண்டர் தான்..” - டிடிவி தினகரன் பிரசாரத்தில் பேச்சு! - TTV Dhinakaran Campaign - TTV DHINAKARAN CAMPAIGN

TTV Dhinakaran Election Campaign: “என் அன்பு நண்பனான ஓபிஎஸ், எனக்காக தேனி தொகுதியை விட்டுக் கொடுத்து, ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடுகிறார், அங்கு அவரும் வெற்றி பெறுவார்” என்று போடியில் நடந்த பிரச்சார கூட்டத்தில் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

TTV Dhinakaran Election Campaign
TTV Dhinakaran Election Campaign

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 24, 2024, 9:40 PM IST

தேனி: அமமுக பொதுச் செயலாளரும், தேனி நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளருமான டிடிவி தினகரன், போடிநாயக்கனூர் மற்றும் கம்பம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில், இன்று (மார்ச் 24) தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், “இங்கு என்னைச் சுற்றி தேசிய கட்சிகளின் கொடிகள் மற்றும் கூட்டணிக் கட்சிகளின் உறுப்பினர்கள் சூழ்ந்து என்னை பாதுகாப்பாக இங்கு அழைத்து வந்துள்ளனர்.

நான் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து போதும், ஜெயலலிதா முதலமைச்சராக இருந்து போதும், உங்கள் கோரிக்கைகளை எல்லாம் பெற்று வந்தேன். இன்று முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா நம்மோடு இல்லை. ஆனால், பிரதமர் மோடி நம்மோடு இருக்கிறார். அவரிடம் உரிமையோடு தொகுதி கோரிக்கைகளை பெற்றுத் தருவேன்.

நம் கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் மோடி. ஆனால், இந்தியா கூட்டணி பிரதமர் வேட்பாளர் யார்? இந்தியா வளர்ச்சிக்காக ஊழலற்ற ஆட்சியைக் கொடுத்து வந்தவர் பிரதமர் மோடி. ஆகவே, மூன்றாவது முறையாக அவர் தான் பிரதமராக வருவார். நான் சுயநலத்திற்காக இந்த கூட்டணியில் சேரவில்லை, அமைச்சர் பதவிக்காக அவர்களுடன் சேரவில்லை, மோடி தமிழ்நாட்டுக்குச் செய்யும் நலத்திட்டங்கள் மற்றும் பணிகளுக்காகத்தான் சேர்ந்துள்ளேன்.

இரட்டை இலை சின்னம் துரோகிகள் கைகளில் உள்ளது. தற்போது உள்ள நமது குக்கர் சின்னம் மூலம் தான், சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் திமுக டெபாசிட் இழந்தது. திமுக ஆட்சியில் போதை கலாச்சாரம், தமிழ்நாட்டின் மூலை முடுக்கெல்லாம் பரவி உள்ளது. ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர்கள் இதில் சம்பந்தபட்டுள்ளார்கள் என்று பிரதமர் வேதனை தெரிவித்தார்.

முன்னால் முதலமைச்சர் ஜெயலலிதா தற்போது இருந்திருந்தால், போதைப் பொருள் விற்கும் கும்பலை என்கவுண்டர் செய்திருப்பார். நீட் தேர்வு ரத்து என்று பொய் வாக்குறுதியைக் கூறி, பொதுமக்களிடம் 1 கோடி கையெழுத்து பெற்று, தற்போது குப்பைத் தொட்டியில் உள்ளது அந்த கையெழுத்து. இப்படி மக்களை ஏமாற்றும் வேலையைத்தான் திமுக செய்து வருகிறது.

உங்களுக்காக உழைக்க மீண்டும் எனக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள். உங்களுக்கும், எனக்கும் உள்ள பந்தம் 25 ஆண்டுகளானது. என் அன்பு நண்பனான ஓபிஎஸ், எனக்காக தேனி தொகுதியை விட்டுக் கொடுத்து, ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடுகிறார். அங்கு அவரும் வெற்றி பெறுவார் என்பது உறுதி" என்று கூறினார்.

இதையும் படிங்க:டிடிவி தினகரனுக்கும் தேனிக்கும் உள்ள அரசியல் தொடர்பு என்ன? ஓர் அரசியல் அலசல்! - TTV Dhinakaran From Theni

ABOUT THE AUTHOR

...view details