திருச்சி :திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் பகுதியைச் சேர்ந்தவர் தலை வெட்டி சந்துரு என்ற சந்திரமோகன். இவர் கடந்த 2020ம் ஆண்டு ஸ்ரீரங்கம் ரயில்வே பாலம் பகுதியில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த ஸ்ரீரங்கம் போலீசார், ரயில்வே குடியிருப்பைச் சேர்ந்த ரவுடி ஆட்டுக்குட்டி சுரேஷ் அவரது அண்ணன் சரவணன் உள்ளிட்டோரை கைது செய்தனர்.
பின்னர் ஜாமீனில் வெளியே வந்த ஆட்டுக்குட்டி சுரேஷ் தனது மனைவி ராகினியுடன் நேற்றிரவு நாவல்பட்டு பகுதியில் உள்ள கோயிலுக்குச் சென்று விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது ஸ்ரீரங்கம் அம்பேத்கர் நகர் அருகே தேங்காய் குடோன் பகுதியில் பைக்குகளில் வந்த கும்பல் ஆட்டுக்குட்டி சுரேஷை வழி மறித்து அரிவாளால் சரமாரியாக தாக்கி உள்ளனர். இதனை தடுக்க முயன்ற அவரது மனைவிக்கும் அரிவாள் வெட்டு விழுந்துள்ளது. இதில், ஆட்டுக்குட்டி சுரேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இது குறித்த தகவல் போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது. இத்தகவலின் அடிப்படையில், திருச்சி மாநகர துணை கமிஷனர் செல்வகுமார், ஸ்ரீரங்கம் உதவி கமிஷனர் நிவேதா லட்சுமி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையும் படிங்க :கருணாநிதியே போயிட்டாரு; அப்புறம் எதுக்கு பேனா சிலை? ஆர்.எஸ்.பாரதி பேச்சுக்கு சிவி சண்முகம் பதிலடி!