தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தற்போதைய இளைஞர்களுக்கு உடல் வலிமை குறைவாக உள்ளது - 'ஐ' பட வில்லன் காமராஜ் சொல்லும் அட்வைஸ் என்ன? - erode news

தற்போதைய தலைமுறையினர் சமூக வலைதளங்களில் மூழ்கியுள்ளனர். அதனால் இளைஞர்களுக்கு உடல் வலிமை குறைந்து வருகிறது என 'ஐ' திரைப்பட நடிகரும், உடற்பயிற்சியாளருமான காமராஜ் கருத்து தெரிவித்துள்ளார்.

தற்போதைய இளைஞர்களுக்கு உடல் வலிமை குறைவாக உள்ளது
தற்போதைய இளைஞர்களுக்கு உடல் வலிமை குறைவாக உள்ளது

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 29, 2024, 1:23 PM IST

தற்போதைய இளைஞர்களுக்கு உடல் வலிமை குறைவாக உள்ளது

ஈரோடு: தமிழ்நாடு பிட்னஸ் அசோசியேஷன் சார்பில் மாநில அளவிலான ஆணழகன் போட்டி ஈரோட்டில் நடைபெற்றது. இதில் தமிழ்நாட்டின் சென்னை, கோவை, சேலம், திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள உடற்பயிற்சி கூடத்தை சேர்ந்த இளைஞர்கள் பங்கேற்றனர். 23 வயதுக்கு கீழ் உள்ளவர்கள், 55 முதல் 85 கிலோ எடை வரை உள்ளவர்கள், 40 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள், வயது எடை வித்தியாசம் இல்லாத பெண்கள் பிரிவு என 13 பிரிவுகளின் கீழ் ஆணழகன் போட்டி நடைபெற்றது.

இதில் பெண்கள் பிரிவில் 6 பெண்களும், ஆண்கள் பிரிவில் 120 ஆண்களும் கலந்து கொண்டு தங்கள் உடல் வலிமை மூலம் இசைக்கு ஏற்ப உடல் தசைகளை விரித்து காண்பித்து காட்டியது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. இதில் அனைத்து பிரிவுகளில் வெற்றி பெறுபவர்களுக்கு ஆணழகன் பட்டத்துடன், ரொக்கம் மற்றும் கோப்பை வழங்கப்பட்டது. மேலும் சிறந்த ஆணழகன் போட்டிகளில் அதிக புள்ளி பெற்று வெற்றி பெற்ற கோவையைச் சேர்ந்த சுலைமான் என்பவருக்கு 2 லட்சம் ரூபாய் மதிப்புள்ள இருசக்கர வாகனம் பரிசாக வழங்கப்பட்டது.

வெற்றி பெற்றவர்களுக்கு சிறப்பு விருந்தினரான 'ஐ' திரைப்பட நடிகரும், உடற்பயிற்சியாளருமான காமராஜ், பரிசு வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தார். இதையடுத்து வெற்றி பெற்ற ஆணழகன்கள் பிப்ரவரி மாதம் கேரள மாநிலத்தில் நடைபெறும் தென்னிந்திய அளவிலான ஆணழகன் போட்டியில் பங்கேற்க இருப்பதாக தமிழ்நாடு பிட்னஸ் அசோசியேஷன் உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய காமராஜ், "ஆணழகன் போட்டிகள் தனியார் பங்களிப்புடன் அதிக அளவில் நடத்தப்பட்டு வருகிறது. தற்போதைய தலைமுறையினர் சமூக வலைதளங்களில் மூழ்கியுள்ளனர். அதனால் இளைஞர்களுக்கு உடல் வலிமை குறைந்து வருகிறது. இந்நிலையில் தமிழ்நாடு அரசு இந்த விளையாட்டை முன்னெடுத்து நடத்தினால் இளைஞர்கள் மத்தியில் உடற்பயிற்சி மீதான ஆர்வம் அதிகரிக்கும். அதன் மூலம் உடல்நலம் பாதுகாக்கப்படும், ஒழுக்கம் நெறியும் அதிகரிக்கும்" என தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:காது வலிக்கு கழுத்தில் ஓட்டை? தவறான சிகிச்சையால் பெண் உயிரிழப்பு..? ஈரோட்டில் நடந்தது என்ன?

ABOUT THE AUTHOR

...view details