சென்னை: தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றுள்ளதால், 23 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதன்படி, கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில், காரைக்கால் பகுதிகளில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்பதால், அப்பகுதிகளில் ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
மஞ்சள் அலர்ட்:சிவகங்கை, ராமநாதபுரம், திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மற்றும் புதுவையில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதால் மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை:
கனமழை காரணமாக மாணவர்களின் பாதுகாப்பை கருதி பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, புதுச்சேரிமற்றும் காரைக்காலில்பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (டிசம்பர் 12) வியாழக்கிழமை விடுமுறை அளித்து கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
கனமழை எச்சரிக்கை காரணமாக திருவண்ணாமலைமாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிப்பதாக மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
21 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை:
கனமழை காரணமாக சென்னையில், இன்று (டிசம்பர்12) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே உத்தரவிட்டுள்ளார்.
அதேபோல், மயிலாடுதுறையிலும் தொடர் மழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
இதையும் படிங்க:அடுத்த நான்கு நாட்களுக்கு இந்த மாவட்டங்களுக்கு எல்லாம் மஞ்சள் அலர்ட்!
கனமழை எச்சரிக்கையைத் தொடர்ந்து நேற்று இரவு முதல் தொடர் மழை பெய்து வருவதால், கடலூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் ஆதித்யா செந்தில்குமார் உத்தரவிட்டுள்ளார்.