தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இன்றைய ராசிபலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள் யார் தெரியுமா? - today rasi palan in tamil

Today Rasipalan in Tamil: மார்ச் 28ஆம் தேதியான இன்று மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளின் பலன்களைப் பார்க்கலாம்.

today rasi palan in tamil
today rasi palan in tamil

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 28, 2024, 6:46 AM IST

Updated : Mar 28, 2024, 9:43 AM IST

மேஷம்:மனதிற்குப் பிடித்தவர்களை மகிழ்ச்சிப்படுத்த முயற்சி செய்வீர்கள். அவர்கள் மனதைக் கவரப் புதுமையான முயற்சிகளை மேற்கொள்வீர்கள். நன்மைகள் மற்றும் உறவினர்கள் தொடர்பாக அதிருப்தி இருக்கக்கூடும். எனினும் புதிய நண்பர்களுடன் மாலையில் விருந்துக்குச் செல்வீர்கள்.

ரிஷபம்:உணர்வுரீதியாகப் பாதிக்கப்பட்டு இருப்பீர்கள். உங்களுக்கு நெருக்கமான ஒருவருடன் உணர்ச்சிப் போராட்டம் காரணமாகப் பிரச்சனைகள் ஏற்படக்கூடும். உங்கள் சந்திப்பின்போது, மற்றவர்கள் ஏற்படுத்தும் தாக்கம் காரணமாகக் குழப்பமான நிலை நிலவக்கூடும். விவாதங்களில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும்.

மிதுனம்:உங்களைச் சுற்றி இருக்கும் மக்களிடம் நீங்கள் ஆராய்ந்த விஷயங்களை எடுத்துக் கூறுவீர்கள். அவர்களும் உங்களது உணர்வுகள் மற்றும் எண்ணங்களைப் புரிந்து கொள்வார்கள். உங்களது எண்ணங்கள் ஈடேற அவர்கள் ஒப்புதல் வழங்குவார்கள். இன்று வேடிக்கை மற்றும் குதூகலம் நிறைந்த நாள்.

கடகம்:விரும்பத்தகாத நிகழ்வுகள் ஏற்படலாம். அதனால் மன வருத்தம் கொள்ளலாம். எனினும் அதை திறமையாகக் கையாண்டு பாதிப்பில்லாமல் வெளிவருவீர்கள். வெற்றி என்பது சுலபமான விஷயம் அல்ல என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். அதற்காக ஒருவர் கடின உழைப்பை மேற்கொள்ள வேண்டும்.

சிம்மம்:பழைய நட்புகளைப் புதுப்பிப்பதற்கும், புதிய தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்வதற்கும் இது சிறந்த நாளாக இருக்கும். நண்பர்களும், உறவினர்களும் உங்கள் வீட்டிற்கு வருகை தருவார்கள். அதனால் வீட்டில் குதூகலமான சூழ்நிலை நிலவும். அவர்களுக்கு சிறந்த வகையில் விருந்தளிப்பீர்கள்.

கன்னி:வர்த்தகம், சந்தோஷம் ஆகிய இரண்டும் இன்று உங்களுக்குக் கைகூடும். சமூக கூட்டங்களால் நன்மை கிடைக்கும். எந்த அளவிற்கு நேரத்தைச் செலவிடுகிறீர்களோ அந்த அளவுக்குப் பணம் செலவாகும். ஆகையால் சிந்தித்து செலவு செய்வது நல்லது.

துலாம்:அனைவரையும் ஈர்க்கும் வண்ணம் இருப்பீர்கள். அது பணியில் உள்ள ஈடுபாடு அல்லது குடும்பத்தின் முழு ஈடுபாட்டை வெளிப்படுத்தும் விதமாக இருக்கும். வர்த்தகத்தில் சிறந்து விளங்குவீர்கள். உங்களுக்குக் கொடுக்கப்பட்ட அனைத்து பணிகளையும் சிறப்பாக நிறைவேற்றி, நல்ல முடிவுகளை மேற்கொள்வீர்கள்.

விருச்சிகம்:உறவுகள் வாழ்க்கையின் வேர்களாகும். நெருங்கிய உறவினர்கள் மற்றும் உங்களைச் சுற்றி உள்ளவர்களை எவ்வாறு நடத்துகிறீர்கள் என்பது மிகவும் முக்கியமாகும். அவர்களது முக்கியத்துவத்தை உணரச் செய்யவும். நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் மீது ஆதிக்கம் செலுத்தக் கூடாது.

தனுசு:கிரக நிலைகள் சாதகமாக இருப்பதால் இன்று சிறந்த நாளாக இருக்கும். உங்களது செயல்திறன் காரணமாகப் பாராட்டைப் பெறுவீர்கள். பணியில் எந்த விதமான சிக்கல் வந்தாலும் எளிதாக சமாளிப்பீர்கள். உங்களது அணுகுமுறையின் மூலம் அனைவரது மனங்களையும் வெல்வீர்கள்.

மகரம்: பணியிடத்தில் அங்கீகாரமும், பாராட்டும் காத்திருக்கின்றன. சக பணியாளர்கள் உங்கள் வெற்றியைப் பார்த்துப் பொறாமைப்படாமல் ஊக்கமளித்து மகிழ்வார்கள். இதனால், புதிய பணிகளில் வரும் சோதனைகளைத் திறமையாக எதிர்கொள்வீர்கள். புதிய வேலைக்கு முயற்சி செய்பவர்கள், சிறிது காலம் பொறுக்கவும். தற்போது நிலைமை சாதகமாக இல்லை.

கும்பம்:உங்களுக்கு இன்று சாதகமான நாளாக இருக்காது. வீட்டில் அமைதியான சூழ்நிலையை ஏற்படுத்துவதில் சிரமம் இருக்கலாம். உங்கள் குழந்தைகள் மூலம் ஏற்படும் பிரச்சினைகள், நிலைமையை மேலும் மோசமாக்கும். குடும்பத்தில் சில சச்சரவுகள் காணப்படும். அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் பிரச்சினையைப் பெரிதாக்க முயற்சி செய்வார்கள்.

மீனம்:தினசரி பணியை ஒழுங்குபடுத்த, அதிக முயற்சிகள் எடுத்துக் கொள்வீர்கள். ஆனால் கிரக நிலைகள் சாதகமாக இல்லாத காரணத்தினால், நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றி அடையாமல் இருக்கும். எனவே பொறுமையைக் கடைப்பிடித்து, உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்திக் கொண்டிருந்தால் நிலைமை தானாகவே சரியாகும்.

Last Updated : Mar 28, 2024, 9:43 AM IST

ABOUT THE AUTHOR

...view details