சென்னை: எழும்பூரில் உள்ள மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் கொண்டுவர வலியுறுத்தி தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில், 31 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்றது. இதில், சங்கங்களின் நிர்வாகிகள் 11 பேர் கலந்துக்கொண்டனர்.
தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில துணைப் பொதுச் செயலாளர் சாந்தகுமார் பேட்டி (Vedio Credits - ETV Bharat Tamil Nadu) தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில், அனைத்து மாவட்டங்களிலும் இன்று போராட்டம் அறிவித்திருந்த நிலையில், அனைத்து மாவட்டங்களிலும் ஆசிரியர்கள் போரட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்பாட்டத்தின் போது தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில துணை பொது செயலாளர் சாந்தகுமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது, “பழைய ஓய்வூதிய திட்டம், இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய முரண்பாடு உள்ளிட்ட 31 கோரிக்கைகளை முன்வைத்து சென்னையில் உள்ள முதன்மை மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகம் முன்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.
இதையும் படிங்க:"ஆசிரியர்களை போராட்டத்தில் பங்கேற்க வற்புறுத்தினால் நடவடிக்கை" - தொடக்கக் கல்வி இயக்குநரகம் எச்சரிக்கை
முதலமைச்சர் வாக்குறுதி: இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய முரண்பாடு 10 ஆண்டுகளுக்கு மேலாக தீர்வு கிடைக்கவில்லை. தற்பொழுதைய தமிழ்நாடு முதலமைச்சர் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த போது, நாங்கள் ஆட்சிக்கு வந்த பின்னர் உங்களின் கோரிக்கைகள் நிறைவேறும் என தெரிவித்திருந்தார். ஆனால், இதுநாள் வரையில் இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய முரன்பாடு தீர்ந்தப்பாடில்லை.
நிதி அமைச்சர் சந்திப்பு:நிதி அமைச்சரை சந்தித்து, புதிய ஒய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து விட்டு, பழைய ஒய்வூதியத்திட்டத்தை அமல்படுத்துவது குறித்து கேட்டபோது, மத்திய அரசு சோம்நாத் கமிட்டி அமைத்துள்ளது, ஆந்திரா அரசு மினிமம் கேரண்டி பென்ஷன் அறிவித்துள்ளது. இவை அனைத்தையும் தமிழ்நாடு அரசு கூர்ந்து கவனித்துக்கொண்டுள்ளது. விரைவில் நல்ல அறிவிப்பு வரும் என கூறியிருந்தார்.
அரசாணை 243 அமல்: ஆனால், ஒரு வருடம் கடந்துள்ளது. சோம்நாத் கமிட்டி அறிக்கையின் அடிப்படையில் மத்திய அரசு ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தை அறிவித்துள்ள நிலையில், தமிழக அரசு தற்போது வரை மௌனம் சாதிப்பதை ஆசிரியர் அமைப்புகள் விரும்பவில்லை. யாரையும் கேட்காமல் கலந்தாலோசிக்காமல் தொடக்கக்கல்வித்துறையில் பணியாற்றும் பெண் ஆசிரியர்களை பாதிக்கும் அரசாணை 243 திமுக அரசு அமல்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:போராட்டம் நடத்திய சென்னை பள்ளி ஆசிரியர்களுக்கு பறந்த மெமோ! மாணவர்களுக்கு சரியாக பாடம் நடத்தவில்லையாம்
கல்வி அலுவலரால் மெமோ: எங்களுக்கு தேவை பழைய ஓய்வூதியத் திட்டம். இந்த ஆர்ப்பாட்டம் சென்னை மட்டுமில்லாமல் மாநிலம் முழுவதும் நடைபெறுகிறது. சென்னையை பொருத்தவரை தற்போது அனைத்து சங்கங்களின் பொறுப்பாளர்கள் மட்டும் கலந்து கொண்டுள்ளனர். தொடர்ந்து, போராட்டங்களில் கலந்துக்கொள்ளும் 21 ஆசிரியர்களுக்கு, சென்னை மாநகராட்சிக் கல்வி அலுவலரால் மெமோ அளிக்கப்பட்டுள்ளது.
இது புதிய நடைமுறையாக இருக்கிறது. இதை ஆசிரியர் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது. ஒவ்வொரு ஆசிரியர்களும் சுமார் 25 ஆண்டு பணி முடித்தவர்கள். இதில் எந்த குற்றச்சாட்டுக்கும் ஆளாகாதவர்கள். அவர்கள் பல்வேறு அமைப்புகளின் பொறுப்பாளர்கள். அவர்கள் போராட்டத்தில் இருப்பதால் மாவட்ட கல்வி அலுவலர் உள்நோக்கத்தோடு தேவையில்லாத காரணம்காட்டி 21 ஆசிரியர்களுக்கு மெமோ வழங்கியுள்ளார்” இவ்வாறு அவர் தெரிவித்தார்.
எத்தனை பேர் போராட்டத்தில் பங்கேற்பு?: இதனிடை.யே, தொடக்கக்கல்வித் துறையில் 31 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற ஆர்ப்பட்டத்தில் தொடக்கக் கல்வித் துறையில் பணியாற்றும் 1 லட்சத்து 22 ஆயிரத்து 343 ஆசிரியர்களில் 84 ஆயிரத்து 884 ஆசிரியர்கள் பணிக்கு வந்துள்ளனர். 37 ஆயிரத்து 476 ஆசிரியர்கள் பணிக்கு வராமல் இன்று விடுப்பில் உள்ளனர் என்று தொடக்கக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்