சென்னை: சிறப்பு பேருந்துகள் அரசு விரைவு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு நாளை (மார்ச்.15) 360 பேருந்துகளும், நாளை மறுநாள் (மார்ச்.16) 420 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும், கோயம்பேட்டிலிருந்து நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு நாளை (மார்ச்.15) 70 பேருந்துகளும், நாளை மறுநாள் (மார்ச்.16) 70 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. தொடர்ந்து, பல்வேறு இடங்களுக்கு 200 சிறப்புப் பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும், மார்ச்.17ஆம் தேதி சொந்த ஊர்களிலிருந்து சென்னை மற்றும் பெங்களூரு திரும்புவதற்கு வசதியாகப் பயணிகளின் தேவைக்கேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்புப் பேருந்துகள் இயக்கிடத் திட்டமிடப்பட்டுள்ளது.