திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடு கட்டும் மக்களுக்கான கட்டுமான பணி ஆணை மற்றும் கர்ப்பிணிகளுக்கு மருத்துவ ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கும் நிகழ்ச்சி இன்று (திங்கட்கிழமை) நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில், ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஐ.பெரியசாமி கலந்து கொண்டு தலைமையேற்றி நடத்தினார். மேலும், சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு நலத்திட உதவிகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியை தொடர்ந்து அமைச்சர் ஐ.பெரியசாமி செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது பேசிய அவர், "கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் ஏழை எளிய மக்களுக்கு வீடு வழங்கும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் துவக்கபட்டு, தமிழகம் முழுவதும் வீடு கட்ட ஆணைகள் வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக ஏரத்தாள 3 ஆயிர்த்து 500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அந்தவகையில், இன்று திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் ஊராட்சி ஒன்றியத்து உட்பட்ட பகுதிகளைச் சேர்ந்த ஆயிரத்து 256 பயனாளிகளுக்கு ஆணை வழங்கி உள்ளோம். ஆத்தூர் தொகுதி முழுவதும் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.