தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

விநாயகர் சதுர்த்தி குறித்த விழிப்புணர்வு; "தவறான சுற்றறிக்கை அனுப்பியோர் மீது நடவடிக்கை" - முதன்மைச் செயலாளர் எச்சரிக்கை! - Vinayagar Chathurthi Circular Issue - VINAYAGAR CHATHURTHI CIRCULAR ISSUE

Vinayagar Chathurthi Circular Issue : விநாயகர் சதுர்த்தி விழா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த கூறி தவறான சுற்றறிக்கை அனுப்பியதற்கு பொறுப்பான அலுவலர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசின் வனத்துறை முதன்மைச் செயலாளர் தெரிவித்துள்ளார்.

பள்ளிக் கல்வி இயக்கக வளாகம், விநாயகர் சிலை
பள்ளிக் கல்வி இயக்கக வளாகம், விநாயகர் சிலை (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 4, 2024, 10:59 PM IST

சென்னை :வனத்துறை முதன்மைச் செயலாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "விநாயகர் சதுர்த்தி விழா தொடர்பாக ஒரு சில மாவட்டங்களில் பள்ளிகளுக்கு வழங்கப்பட்ட அறிவுறுத்தல்கள் தொடர்பாக ஊடகங்களில் வெளிவந்துள்ள செய்திகள் குறித்து பின்வருமாறு விளக்கம் அளிக்கப்படுகிறது.

விநாயகர் சதுர்த்தி விழா தொடர்பாக விழா ஏற்பாட்டாளர்கள் அல்லது அமைப்பாளர்கள், செய்ய வேண்டிய அல்லது செய்யக்கூடாத பணிகள் தொடர்பாக பொதுமக்களுக்கு ஆண்டுதோறும் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியம் வாயிலாக சில அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

மேலும், உயர்நீதிமன்றம் மற்றும் தேசிய பசுமை தீர்ப்பாயம் (தென்மண்டலம்) வாயிலாக பெறப்படும் அறிவுறுத்தல்கள் பொதுமக்களுக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் செய்தி வெளியீடு வாயிலாக வழங்கப்பட்டு வருகின்றன.

இவ்வாறு, தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியத்தினால் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையானது, விநாயகர் சதுர்த்தி விழா ஏற்பாட்டாளர்கள் அல்லது அமைப்பாளர்கள், சிலை செய்வோர் மற்றும் பொதுமக்களுக்கு மட்டுமே உரிய அறிவுறுத்தல்கள் ஆகும். மேற்காணும் சூழ்நிலையில், ஒரு சில மாவட்டங்களில் தவறான புரிதலின் அடிப்படையில் பள்ளிகளுக்கு மேற்கூறிய விழா தொடர்பாக அறிவுறுத்தல் அல்லது உறுதிமொழி குறித்து சுற்றறிக்கை வெளியிடப்பட்டு உள்ளது.

இவ்வாறு பள்ளிகளுக்கு வெளியிடப்பட்ட அறிவுறுத்தல்கள், அரசின் ஆணைகளுக்கு முற்றிலும் முரணானது என்பதால், ஒரு சில மாவட்டங்களில் மட்டும் வெளியிடப்பட்ட இந்த அறிவுறுத்தல்கள் முற்றிலுமாக ரத்து செய்யப்படுகின்றது. மேலும், இவ்வாறு தவறான சுற்றறிக்கை அனுப்பியதற்கு பொறுப்பான அலுவலர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கையும் எடுக்கப்படுகிறது" என அரசு முதன்மைச் செயலாளர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, பெரம்பலூர் மற்றும் திருச்சி மாவட்டங்களில் உள்ள அனைத்து வகை பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் விநாயகர் சதுர்த்தி குறித்த விழிப்புணர்வு சர்குலரை அனுப்பி இருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

இதையும் படிங்க :சர்ச்சையை கிளப்பிய சர்குலர்.. பெரம்பலூர் மாவட்ட கல்வி அதிகாரியை பதவி நீக்கம் செய்ய தமிழக அரசுக்கு கடிதம்! - perambalur deo circular

ABOUT THE AUTHOR

...view details