தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தட்கல் முறையில் பாஸ்போர்ட் விண்ணப்பிக்க இதுதான் நடைமுறை... மதுரை மண்டல பாஸ்போர்ட் அலுவலர் வசந்தன் பேட்டி! - MADURAI PASSPORT OFFICER

தட்கல் முறையில் பாஸ்போர்ட் விண்ணப்பிப்பதற்கான நடைமுறைகள் குறித்து மதுரை மண்டல பாஸ்போர்ட் அலுவலர் வசந்தன் விளக்கம் அளித்துள்ளார்.

மதுரை மண்டல பாஸ்போர்ட் அலுவலர் வசந்தன் பேட்டி
மதுரை மண்டல பாஸ்போர்ட் அலுவலர் வசந்தன் பேட்டி (ETV Bharat Tamilnadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 29, 2025, 2:01 PM IST

Updated : Jan 29, 2025, 5:04 PM IST

மதுரை:தட்கல் முறையில் கடவுச்சீட்டு (Passport) விண்ணப்பம் செய்யும் போது வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையை படித்து தங்களின் விண்ணப்பத்தின் தகுதியைத் தெரிந்து கொண்டு தான் விண்ணப்பம் செய்ய வேண்டும் என மதுரை மண்டல பாஸ்போர்ட் அலுவலர் வசந்தன் கேட்டுக்கொண்டுள்ளார்.

கடந்த ஓராண்டில் மதுரை மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தின் மேற்கொள்ளப்பட்ட சிறப்பு ஏற்பாடுகள் மற்றும் பாஸ்போர்ட் விண்ணப்ப நிலவரங்கள் குறித்து மதுரை மண்டல பாஸ்போர்ட் அலுவலர் வசந்தன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

மதுரை மண்டல பாஸ்போர்ட் அலுவலர் வசந்தன் பேட்டி (ETV Bharat Tamilnadu)

மதுரை மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தின்கீழ் இரண்டு பாஸ்போர்ட் சேவை மையங்களும் (மதுரை மற்றும் திருநெல்வேலி) மற்றும் வீட்டு தபால் நிலைய பாஸ்போர்ட் சேவை மையங்களும் செயல்பட்டு வருகின்றன. 2024 ஆம் ஆண்டு மட்டும் மதுரை மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில் 2,89,603 பாஸ்போர்ட் விண்ணப்பங்கள் பெறப்பட்டன அதில் 2,79,988 பாஸ்போர்ட்கள் வழங்கபட்டுள்ளன. மதுரை மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில் 2,59,443 பாஸ்போர்ட்களும், 20,545 காவல்துறை தடையின்மைச் சான்றிதழ்களும் வழங்கப்பட்டுள்ளன. முந்தைய வருடத்தை விட 14,033 பாஸ்போர்ட் சேவைகள் அதிகமாக வழங்கப்பட்டுள்ளன. 2023ஆம் ஆண்டு 2,72.896 விண்ணப்பங்கள் பெறப்பட்டன அதில் 2,65,955 பாஸ்போர்ட் சேவைகள் வழங்கபட்டுள்ளன. அதாவது 2,48,920 பாஸ்போர்ட்களும் 17,035 காவல்துறை தடையின்மை சான்றிதழ்களும் வழங்கப்பட்டுள்ளன.

2024-ஆம் ஆண்டில் மதுரை மண்டல பாஸ்போர்ட் அலுவலகதின்கீழ் இயங்கும் தபால் நிலைய பாஸ்போர்ட் சேவை மையங்களில் பொதுமக்களின் தேவையை கருத்தில் கொண்டு தேவகோட்டை, ராமநாதபுரம் மற்றும் நாகர்கோவில் சேவை மையங்களில் பாஸ்போர்ட் விண்ணப்பதாரர்களின் வசதிக்காக பாஸ்போர்ட் விண்ணப்ப நேர்காணலுக்கான முன்பதிவு எண்ணிக்கை அதிகப்படுத்தபட்டுள்ளது. கிட்டத்தட்ட அனைத்து பாஸ்போர்ட் சேவை மையங்களிலும் அடுத்த வேலைதினத்தில் பாஸ்போர்ட் விண்ணப்ப நேர்காணலுக்கான முன்பதிவு கிடைப்பதற்கு ஏற்பாடு செய்யபட்டுள்ளது.

மேலும் 2023-ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் பொதுமக்களின் குறைகளை தீர்ப்பதற்காக மக்கள் குறைதீர்ப்பு மையம் உருவாக்கபட்டு பாஸ்போர்ட் விண்ணப்பதாரர்களின் குறைகள் குறிப்பிட்ட நேரத்தில் நிவர்த்தி செய்யப்பட்டு வருகிறது. அதாவது 32,090 குறைகள் பல்வேறு முறையில் பெறப்பட்டு (தபால், மெயில், போன் அழைப்புகள் மற்றும் இதர சமுக ஊடகங்கள்) அதில் 31,865 விண்ணப்பங்களுககு தீர்வு காணப்பட்டுள்ளன. சராசரியாக 2 அல்லது 3 நாட்களில் பொதுமக்களின் குறைகள் நிவர்த்தி செய்யப்படுகின்றன. இவை வாரந்திர அறிக்கை மூலம் கண்காணிக்கப்படுகிறது. இதன் மூலம் மேற்படிப்பு, வியாபாரம், தொழில் மற்றும் வேலைக்கு வெளிநாடு செல்லும் விண்ணப்பதாரர்கள் உட்னடியாகப் பயன்பெறுகின்றனர். மேலும் கடந்த ஆண்டு இரண்டு பாஸ்போர்ட் அதாலத் சேவை பிப்ரவரி மற்றும் நவம்பர் மாதங்கள் நடத்தப்பட்டன அதில் வெகு நாட்களாக நிலுவையிலிருந்த விண்ணப்பஙாகள் பரிசீலனை செய்யப்பட்டு தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு பாஸ்போர்ட் வழங்கப்பட்டன.

அதுமட்டுமன்றி கடந்தாண்டு பத்துக்கு மேற்பட்ட கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு பாஸ்போர்ட் தொடர்பான விழிப்புணர்வு வழங்கப்பட்டது. இதன் மூலம் மாணவர்கள் தாங்களாகவே ஆன்லைனில் விண்ணப்பம் செய்து அதிகமான மாணவ விண்ணப்பதாரர்கள் DigiLocker மூலம் அசல் ஆவணங்களை கொண்டு வராமல் பாஸ்போர்ட்டுக்கு தேவையான ஆவணங்களை பதிவேற்றம் செய்து பாஸ்போர்ட் பெற்று கொண்டனர்.

குழந்தைகள் பாஸ்போர்ட் பெறுவதை எளிதாக்குவதற்காக வெளியுறவுத்துறை அமைச்சகம் சில மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. அதனடிப்படையில் பாஸ்போர்ட் சேவை இணையத்தளத்தில் Annexure "சி" மற்றும் "டி" படிவங்களில் குழந்தைகள் பாஸ்போர்ட் பெறுவதற்கு தேவையான ஆவணங்களின் விவரம் தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளன. பாஸ்போர்ட் விண்ணப்பதாரர்கள் அதனை சரியாக படித்து தேவையான ஆவணங்களை கடவுச்சீட்டு விண்ணப்பத்துடன் சமர்ப்பிக்கும்போது குழந்தைகளுக்கு விரைவாக கடவுசீட்டு பெற முடியும்.

பாஸ்போர்ட் விண்ணப்பதாரர்கள் தட்கல் முறையில் விண்ணப்பம் செய்யும்பொழுது வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையை கவனமாக படித்து தங்களின் விண்ணப்பத்தின் தகுதியை தெரிந்து கொண்டு விண்ணப்பம் செய்ய வேண்டும். தவறாக விண்ணப்பம் செய்யும்பட்சத்தில் தேவையில்லாத கால தாமதமும் அதிகமான கட்டணமும் வீணாகும். இதனால் அவசர முறையில் பாஸ்போர்ட் பெற நினைப்பவருக்கு முன் அனுமதி கிடைப்பதில் கால தாமதமாகும். சரியான ஆவணங்களுடன் தட்கால் முறையில் பாஸ்போர்ட் விண்ணப்பம் செய்யும் விண்ணப்பதாரர்களுக்கு ஓரிரு வேலைதினங்களில் வழங்கப்படுகிறது.

மேலும் சாதாரண முறையில் பாஸ்போர்ட் விண்ணப்பம் செய்யும் விண்ணப்பதாரர்களுக்கு மதுரை பாஸ்போர்ட் அலுவலகம் காவல்துறையினருடன் இணைந்து சராசரியாக 11 தினங்களில் விண்ணப்பதாரர்களுக்கு குறைந்த கால அவகாசத்தில் பாஸ்போர்ட் வழங்கபட்டு வருகின்றது என தெரிவித்தார்.

Last Updated : Jan 29, 2025, 5:04 PM IST

ABOUT THE AUTHOR

...view details