தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பி.எட் வினாத்தாள் கசிந்த விவகாரம்; உயர் கல்வித்துறை எடுத்த அதிரடி முடிவு! - B Ed exam Question Paper Leak Issue

B.Ed Exam Question Paper Leak Issue: பி.எட் மாணவர்களுக்கான வினாத்தாள் முன்கூட்டியே கசிந்த நிலையில், அந்த வினாத்தாள் நிறுத்தி வைக்கப்பட்டு, ஆன்லைன் மூலம் புதிய வினாத்தாள் அனுப்பப்பட்டு தேர்வு நடைபெறும் என தமிழக உயர் கல்வித்துறை தெரிவித்துள்ளது.

வெளியான வினாத்தாள்
வெளியான வினாத்தாள் (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 29, 2024, 11:09 AM IST

சென்னை:பிஎட் மாணவர்களுக்கு தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் நடத்தக்கூடிய நான்காவது செமஸ்டர் தேர்வு தற்போது நடைபெற்று வருகிறது. 27ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை செமஸ்டர் தேர்வுகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதில் இன்று நடைபெற வேண்டிய creating an inclusive school என்கிற பாடத்திற்கான வினாத்தாள் தேர்வுக்கு முன்பே கசிந்தது.

இந்த நிலையில், இது குறித்து விளக்கம் அளித்த தமிழக உயர் கல்வித்துறை, "வெளியானதாக சொல்லப்படும் வினாத்தாள் திரும்ப பெற்றுள்ளதாகவும், இன்று காலை 10 மணிக்கு தேர்வு துவங்குவதற்கு முன்பு, இணையதளம் வாயிலாக புதிய வினாத்தாள் அனுப்பப்படும்" என தெரிவித்தது.

மேலும் அச்சடிக்கப்பட்டு அனுப்பி வைக்கப்பட்ட வினாத்தாள்கள் அனைத்தும் பாதுகாப்பாக வைக்கும் படியும், வினாத்தாளை யார் வெளியிட்டது என்பது குறித்து ஆய்வு நடைபெற்று வருவதாகவும், பெயர் வெளியிட விரும்பாத தமிழ்நாடு ஆசிரியர் கல்வியில் மற்றும் பல்கலைக்கழக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

join ETV Bharat Tamil Nadu whatsApp channel Click here (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே க்ளிக் செய்யவும்

இதையும் படிங்க:கல்வியுடன் கவுன்சிலிங் முக்கியம்.. தேசிய நல்லாசிரியர் விருது பெறும் மதுரை ஆசிரியர் கூறுவது என்ன? - national teacher award 2024

ABOUT THE AUTHOR

...view details