சென்னை:நான்கு ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு அளித்தும், 11 காவல் துறை உயரதிகாரிகளை பணியிட மாற்றம் செய்தும் தமிழக அரசு இன்று அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக, தமிழக உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் தீரஜ் குமார் பிறப்பித்துள்ள உத்தரவின்படி, தஞ்சை மாவட்டம், ஒரத்தநாடு உட்பிரிவு காவல் உதவி கண்காணிப்பாளராக பதவி வகித்து வந்த ஐ.ஷானாஜ், காவல் கண்காணிப்பாளராக பதவி உயர்வு பெற்று, சென்னை சைபர் குற்றப்பிரிவு கண்காணிப்பாளராக பணியமர்த்தப்பட்டுள்ளார்.
இவரை போன்று, காஞ்சிபுரம் மாவட்டம்,ஸ்ரீபெரும்புதூர் காவல் உதவி கண்காணிப்பாளராக பொறுப்பு வகித்து வந்த ஆர். உதயகுமார் காவல் கண்காணிப்பாளராக பதவி உயர்வு பெற்றுள்ளார். அவர் ஏற்கெனவே காலியாக உள்ள கோவை தெற்கு மாநகர காவல் துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ராமநாதபுரம் காவல் உதவி கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த என்.யூ.சிவராமன், காவல் கண்காணிப்பாளராக பதவி உயர்வு பெற்றுள்ளார். இவர், எஸ்.பிருந்தா ஐபிஎஸ் இதுவரை வகித்து வந்த சேலம் வடக்கு மாவட்ட காவல் துணை ஆணையராக பணியாற்றுவார்.
இதையும் படிங்க:குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய பதவிகளை 3 மாதங்களில் நிரப்ப வேண்டும்! நீதிபதிகள் உத்தரவு!