தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நடப்பாண்டில் 10 ஆயிரம் அரசு காலி பணியிடங்கள் நிரப்பப்படும் - எம்எல்ஏ க.அன்பழகன் தகவல்! - எம்எல்ஏ சாக்கோட்டை க அன்பழகன்

Kumbakonam TNPSC free coaching: நான் முதல்வன் திட்டத்தின் கீழ் இதுவரை 1 லட்சத்து 19 ஆயிரம் மாணவ, மாணவியர்கள் வேலை வாய்ப்பு பெற்றுப் பயனடைந்துள்ளனர் என எம்எல்ஏ சாக்கோட்டை க.அன்பழகன் தெரிவித்துள்ளார்.

எம்எல்ஏ  சாக்கோட்டை க அன்பழகன்
எம்எல்ஏ சாக்கோட்டை க அன்பழகன்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 10, 2024, 7:40 PM IST

எம்எல்ஏ சாக்கோட்டை க அன்பழகன்

தஞ்சாவூர்: கும்பகோணம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு வாரிய தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவ, மாணவியர்களுக்கும், தனியார் பயிற்சி மையங்களில் கட்டணம் செலுத்திப் பயில முடியாதவர்களுக்கு உதவிடும் வகையில் டி.என்.பி.எஸ்.சி இலவசப் பயிற்சி முகாம் இன்று (மார்ச்.10) கும்பகோணத்தில் நடைபெற்றது.

இதனைத் தஞ்சை மாவட்ட வருவாய் அலுவலர் டி தியாகராஜன் முன்னிலையில், கும்பகோணம் எம்எல்ஏ சாக்கோட்டை க அன்பழகன் தொடங்கி வைத்தார். இதில் மாநகராட்சி ஆணையர் லெட்சுமணன், சிட்டி யூனியன் வங்கி மேனாள் பொது மேலாளர் எஸ் பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதில் பங்கேற்ற மாணவர்களுக்கு இலவசமாகப் பயிற்சி கையேடும் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில், கும்பகோணம் எம்எல்ஏ சாக்கோட்டை க அன்பழகன் பேசுகையில், “தமிழக அரசின் பல்வேறு துறைகளில் இருந்த காலிப்பணியிடங்களில், கடந்த இரண்டரை ஆண்டுகளில் மட்டும் 60 ஆயிரத்து 567 காலிப்பணியிடங்கள் உரியத் தேர்வுகள் வாயிலாகத் தகுதியானவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

நான் முதல்வன் திட்டத்தின் கீழ் இதுவரை ஒரு லட்சத்து 19 ஆயிரம் மாணவ, மாணவியர்கள் வேலை வாய்ப்பு பெற்றுப் பயனடைந்துள்ளனர். நடப்பாண்டில் 10 ஆயிரம் அரசு காலி பணியிடங்களை நிரப்புவதற்காகத் தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது” என தெரிவித்தார்.

மேலும், இந்த ஒரு நாள் முகாமில் பங்கேற்கப் பதிவு செய்த அனைவருக்கும் இலவசமாகவே தேர்விற்குரிய வினா விடை தொகுப்புகள் அடங்கிய புத்தகங்கள் வழங்கப்பட்டது. மேலும், இந்த முகாமில், தேர்விற்கு எப்படி தயார் செய்ய வேண்டும். எதை எப்படி படிக்க வேண்டும். தேர்வு எப்படி எழுத வேண்டும். எதற்கு முன்னுரிமை தந்து படிக்க வேண்டும் எதை எதை தவிர்க்க வேண்டும் எதை பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும் என மாணவர்களுக்கு எடுத்துரைத்தனர்.

இதையும் படிங்க:ஜாபர் சாதிக் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு!

ABOUT THE AUTHOR

...view details