சென்னை:பொறியியல் படிப்பிற்கான முதற்கட்ட பொதுப்பிரிவு கலந்தாய்வு கடந்த ஜூலை 25ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகின்றது. இதில், தற்போது முதல் கட்ட கலந்தாய்வு நிறைவடைந்துள்ளது. 20 கல்லூரிகளில் மட்டுமே 60 சதவீதத்திற்கு அதிகமான இடங்கள் நிரம்பி உள்ளது.
30 கல்லூரிகளில் மட்டுமே 40 சதவீதத்திற்கும் அதிகமான இடங்கள் நிரம்பி இருக்கின்றன. மேலும், 206 பொறியியல் கல்லூரிகளில் ஒரு இலக்கத்தில் மட்டுமே இடங்கள் நிரம்பியிருக்கின்றது என்ற தகவலும் வெளியாகி உள்ளன.
முதற்கட்ட கலந்தாய்வு முடிவில் அதிக இடங்களை நிரப்பிய கல்லூரிகளின் வரிசையில் சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, அண்ணா பல்கலைக்கழக கிண்டி வளாகம், குரோம்பேட்டை தொழில்நுட்பக் கல்லூரி உள்ளிட்ட பத்து கல்லூரிகளில் அதிக இடங்கள் நிரம்பியிருக்கின்றன. முதற்கட்ட பொறியியல் கலந்தாய்வின் முடிவில் 18 ஆயிரத்து 794 மாணவர்களுக்கு இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.