தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அமெரிக்காவில் இருந்தபடியே அமைச்சர்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை..உதயநிதி கூறியது என்ன? - TN CM MK Stalin

TN CM MK Stalin: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அமெரிக்காவில் இருந்தபடியே காணொளி வாயிலாக திமுகவின் முப்பெரும் விழா மற்றும் பொது உறுப்பினர் கூட்டங்கள் தொடர்பாக ஒருங்கிணைப்புக் குழுவுடன் இன்று ஆலோசனை மேற்கொண்டார்.

முதல்வர் ஸ்டாலின் உடனான ஆலோசனையில் உதயநிதி, ஆர்.எஸ்.பாரதி
முதல்வர் ஸ்டாலின் உடனான ஆலோசனையில் உதயநிதி, ஆர்.எஸ்.பாரதி (CImage Credit - ETV Bharat Tamilnadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 8, 2024, 10:54 PM IST

சென்னை: தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் (செப் 8) அமெரிக்காவில் இருந்தபடியே காணொளி வாயிலாக திமுக ஒருங்கிணைப்புக் குழுவின் பணிகள் குறித்து இன்று ஆலோசனை மேற்கொண்டார். இதில் அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, உதயநிதி ஸ்டாலின் மற்றும் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் கலந்து கொண்டனர்.

  • முப்பெரும் விழா ஏற்பாடுகள் குறித்து கேட்டறிந்தார்.
  • மாநிலம் முழுவதும் நடைபெறும் பொது உறுப்பினர் கூட்டங்கள், சுவர் விளம்பரங்கள், கொடியேற்றும் நிகழ்ச்சிகள் குறித்தும் விவரங்களை கேட்டறிந்தார்.
  • பவளவிழாவையொட்டி தொண்டர்கள் வீடுகள்-அலுவலகங்கள்-வணிக வளாகங்களில் கொடிகளை பறக்கவிட வேண்டும் என்று தெரிவித்தார்.
  • கையெழுத்தாகும் முதலீடுகள் குறித்து ஒருங்கிணைப்புக்குழுவினரிடம் தகவல்களை பகிர்ந்து கொண்டார்.
  • அமெரிக்கவாழ் தமிழர்கள் அளித்த வரவேற்பு பற்றியும், முதலீட்டாளர்களுக்கு தமிழ்நாட்டில் நடைபெறும் ஆட்சி பற்றி தெரிந்திருப்பதாக மகிழ்ச்சி தெரிவித்தார்.
  • சிகாகோவில் நேற்று நடைபெற்ற தமிழர்களுடனான சந்திப்பு நிகழ்ச்சி மிகச் சிறப்பாக இருந்ததாக சந்தோஷமாக தெரிவித்தார்.
  • தமிழ்நாடு முதலமைச்சர் நாடு திரும்பியதும், திமுகவில் செய்ய வேண்டிய மாற்றங்கள் குறித்த பரிந்துரைகளை ஒருங்கிணைப்புக்குழு வழங்கும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அப்போது ஸ்டாலினிடம் தெரிவித்தார்.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

இதையும் படிங்க : "ஆண்டுக்கு ஒருமுறையாவது குழந்தைகளோடு தமிழ்நாட்டுக்கு வாருங்கள்" - அயலக தமிழர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அழைப்பு! - TN CM MK Stalin in USA today Speech

ABOUT THE AUTHOR

...view details