சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள அமைச்சரவை அறையில், இன்று (ஜன.23) அமைச்சர்கள் கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில், இந்த ஆண்டின் தொடக்கத்தில் நடைபெற வேண்டிய தமிழக சட்டப் பேரவையின் முதல் கூட்டம் இன்னும் நடைபெறாத நிலையில், சட்டபேரவைக் கூட்டத்தை கூட்டுவது தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, மாநில மகளிர் கொள்கைக்கு அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. மேலும் ஏற்கனவே ஆளுநருக்கும், தமிழக அரசுக்கும் கருத்து வேறுபாடு உள்ள நிலையில், அவரை அழைப்பதா, வேண்டாமா என்பது குறித்தும் விவாதிக்கபட்டதாக கூறப்படுகிறது. தொடர்ந்து, மத்திய அரசு பிப்ரவரி 1ஆம் தேதி தனது இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்கிறது. இந்த நிலையில், தமிழக அரசின் ஆண்டின் முதல் கூட்டம் வருகின்ற பிப்ரவரி 2வது வாரத்தில் நடைபெறும் எனவும் எதிர்பார்க்கபடுகிறது.
குறிப்பாக, மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட் தாக்கலின் பிறகு, மக்களவைத் தேர்தலுக்கான தேதியும் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுவதால், பிப்ரவரி மாதத்திலே தமிழ்நாடு அரசு 2024 - 2025ஆம் ஆண்டிற்கான தனது பட்ஜெட்டையை தாக்கல் செய்வதற்கான பணிகளை மேற்கொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதை முன்னிறுத்தி, ஏற்கனவே நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பல்வேறு தொழில் அமைப்புகள் மற்றும் சங்கங்களுடன் கருத்து கேட்பு கூட்டத்தையும் நடத்தி முடித்தியிருக்கிறார் என்பதும் குறிப்பிடதக்கது.
மேலும், சட்டப்பேரவை கூட்டத்தொடரின் போது, ஆளுநர் உரையில் இடம் பெற வேண்டிய அம்சங்கள் குறித்தும், தொழில்துறை, சமூக நலத்துறை, கலால்துறை தொடர்பாகவும் முக்கிய முடிவுகளை எடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. குறிப்பாக இன்றைய கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட துறைகளுடைய செயலாளர்கள் மற்றும் அத்துறையினுடைய அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: திருச்சி சட்டப் பல்கலையில் குளிர்பானத்தில் சிறுநீர் கலந்த விவகாரம்; 2 மாணவர்களுக்கு செமஸ்டர் எழுத தடை!