தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

விஜயதாரணியின் பதவி விலகல் ஏற்பு - சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு! - விஜயதாரணி பதவி விலகல்

Vijayadharani Resignation accepted: விஜயதாரணியின் பதவி விலகல் கடிதத்தை தான் ஏற்றுக் கொண்டதாக சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 25, 2024, 1:55 PM IST

Updated : Feb 25, 2024, 4:51 PM IST

திருநெல்வேலி:நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு, விஜயதாரணியின் பதவி விலகல் கடிதத்தை தான் ஏற்றுக் கொண்டதாகத் தெரிவித்து உள்ளார். நேற்றைய தினம், கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினராக இருந்த விஜயதாரணி, டெல்லியில் வைத்து தன்னை பாஜகவில் அதிகாரப்பூர்வமாக இணைத்துக் கொண்டார்.

இதனையடுத்து, கட்சித் தாவல் விதிகளின் படி, விஜயதாரணியை சட்டமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்ய வேண்டும் எனத் தமிழகக் காங்கிரஸ் தலைவர் கு.செல்வப்பெருந்தகை சபாநாயகருக்குக் கடிதம் வாயிலாகத் தெரிவித்திருந்தார். இதனையடுத்து, தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்து, அக்கடிதத்தைச் சபாநாயகருக்கு விஜயதாரணி அனுப்பி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், இது தொடர்பாக நெல்லையில் சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு செய்தியாளர்களைச் சந்தித்து கூறும்போது, "கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு சட்டமன்ற உறுப்பினர் விஜயதாரணி, காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி பாரதிய ஜனதா கட்சியில் இணைந்ததாக ஊடகம் மூலம் தகவல் அறியப்பட்டேன்.

காங்கிரஸ் கட்சியின் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான செல்வப்பெருந்தகை இணையம் வாயிலாக கடிதம் ஒன்றை சபாநாயகரான எனக்கும், சட்டமன்ற முதன்மைச் செயலாளருக்கும் அனுப்பி இருந்தார். அதில், விஜயதாரணி எம்.எல்.ஏ இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் படி காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற உறுப்பினராக இருக்கும் நிலையில், மாற்றுக் கட்சியான பாஜகவில் இணைந்துள்ளார். அவர் மீது கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் படி நடவடிக்கை எடுத்து, பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும் என அதில் தெரிவித்திருந்தார்.

இதேபோல், பாரதிய ஜனதா கட்சியில்தான் இணைந்து கொண்டதாகவும், காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி உள்ளதாகவும் கூறி, தனது பதவியை ராஜினாமா செய்வதாக சட்டமன்ற விதி 21 படிவம் F முழுவதும் பூர்த்தி செய்து, முறைப்படி தமது கைப்பட எழுதி இணையம் வாயிலாக எனக்கும், முதன்மைச் செயலாளருக்கும் பதவி விலகல் கடிதத்தை விஜயதாரணி அனுப்பி இருந்தார்.

மேலும், இன்று (பிப்.25) காலை விஜயதாரணி என்னை தொலைபேசியில் அழைத்து, தான் முறைப்படி கடிதத்தை, தனது கைப்பட எழுதி அனுப்பி இருப்பதாகவும் தெரிவித்தார். இந்த நிலையில், அதனை முறையாகப் பரிசீலனை செய்து பார்த்ததில், சட்டமன்ற உறுப்பினராக உள்ள ஒருவர், தான் பதவி விலகுவதாகத் தெரிவிக்க சட்டமன்ற விதியில் உள்ள படிவம் முறையாக பூர்த்தி செய்திருக்க வேண்டும். அதனை விஜயதாரணி எம்எல்ஏவும் பூர்த்தி செய்து, கைப்பட கடிதத்துடன் அனுப்பி உள்ளதால், பதவி விலகலை ஏற்றுக் கொள்வதாக” தெரிவித்தார்”.

இதையும் படிங்க:மத்திய அரசு ஒரு ரூபாய் கூட தரவில்லை.. வின்பாஸ்ட் நிறுவனத்திற்கு அடிக்கல் நாட்டிய பின் ஸ்டாலின் பேச்சு!

Last Updated : Feb 25, 2024, 4:51 PM IST

ABOUT THE AUTHOR

...view details