திருப்பூர்:திருப்பூர்மக்களவைத் தொகுதியில் திமுக கூட்டணியில் போட்டியிட்ட சிபிஐ வேட்பாளர் சுப்பராயன் அதிமுக வேட்பாளர் அருணாச்சலத்தை விட 1,25,928 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
வ.எண் | வேட்பாளர்கள் | கட்சி | பெற்ற வாக்குகள் |
1 | சுப்பராயன் | சிபிஐ | 4,72,739 |
2 | அருணாச்சலம் | அதிமுக | 3,46,811 |
3 | முருகானந்தம் | பாஜக | 1,85,322 |
4 | சீதாலட்சுமி | நாதக | 95,726 |
- திருப்பூர் மக்களவைத் தொகுதியில் திமுக கூட்டணியிலுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் கே.சுப்பராயன் 3,74,989 வாக்குகளும் அதிமுக வேட்பாளர் அருணாச்சலம் 2,73,824 வாக்குகளும் பாஜக வேட்பாளர் ஏபி முருகானந்தம் 1,46,966 வாக்குகளும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதா லட்சுமி 75,111 வாக்குகளும் பெற்றுள்ளனர். திருப்பூரில் சிபிஐ வேட்பாளர் கே.சுப்பராயன் அதிமுக வேட்பாளர் அருணாச்சலத்தை விட 1,01,165 வாக்குகள் முன்னிலையில் உள்ளார். - 04.58 PM நிலவரம்.
- திருப்பூர் மக்களவைத் தொகுதியில் திமுக கூட்டணியிலுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் கே.சுப்பராயன் 2,76,815 வாக்குகளும் அதிமுக வேட்பாளர் அருணாச்சலம் 2,05,105 வாக்குகளும் பாஜக வேட்பாளர் ஏபி முருகானந்தம் 1,06,470 வாக்குகளும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதா லட்சுமி 55,627 வாக்குகளும் பெற்றுள்ளனர். திருப்பூரில் சிபிஐ வேட்பாளர் கே.சுப்பராயன் அதிமுக வேட்பாளர் அருணாச்சலத்தை விட 71,710 வாக்குகள் முன்னிலையில் உள்ளார். - 03.31 PM நிலவரம்.
- திருப்பூர் மக்களவைத் தொகுதியில் திமுக கூட்டணியிலுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் கே.சுப்பராயன் 1,41,203 வாக்குகளும் அதிமுக வேட்பாளர் அருணாச்சலம் 1,05,089 வாக்குகளும் பாஜக வேட்பாளர் ஏபி முருகானந்தம் 55,424 வாக்குகளும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதா லட்சுமி 28,175 வாக்குகளும் பெற்றுள்ளனர். திருப்பூரில் சிபிஐ வேட்பாளர் கே.சுப்பராயன் அதிமுக வேட்பாளர் அருணாச்சலத்தை விட 36,114 வாக்குகள் முன்னிலையில் உள்ளார். - 12.47 PM நிலவரம்.
- திருப்பூர் மக்களவைத் தொகுதியில் திமுக கூட்டணியிலுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் கே.சுப்பராயன் முன்னிலையில் உள்ளார். - 10.24 AM
2024 நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில், திருப்பூர் தொகுதியில், திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மீண்டும் கே.சுப்பராயன், அதிமுக சார்பில் ஈரோடு புறநகர் கிழக்கு மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணிச் செயலாளர் அருணாச்சலம், பாஜக சார்பில் அக்கட்சியின் மாநில பொதுச் செயலாளர் ஏபி முருகானந்தம், நாம் தமிழர் கட்சி சார்பில் சீதா லட்சுமி உள்ளிட்டோர் முக்கிய வேட்பாளர்களாக பார்க்கப்படுகின்றனர்.