திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே கொசவபட்டியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் 8ஆம் வகுப்பு பயின்று வரும் கோகுல் (13), 5ஆம் வகுப்பு பயின்று வரும் யாதேஸ்வர் (10) மற்றும் 5ஆம் வகுப்பு பயின்று வரும் டாங்லின் இன்பராஜ் (10) ஆகிய மூன்று பேரும் இன்று (டிச.07) பள்ளி விடுமுறை என்பதால் கொசவபட்டியில் உள்ள பேபி குளம் என்ற ஊரணியில் குளிக்கச் சென்றுள்ளனர்.
அப்போது மூன்று பேரும் ஊரணியில் குளித்துக் கொண்டிருக்கும் பொழுது, ஆழமான பகுதிக்கு சென்று குளித்த பொழுது நிலை தடுமாறி நீரில் மூழ்கியதில் ஒருவரை ஒருவர் காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டபொழுது மூன்று பேரும் நீரில் மூழ்கி இறந்ததாகக் கூறப்படுகிறது.
இதற்கிடையில், வெகு நேரமாகியும் குளிக்கச் சென்றவர்கள் வீட்டிற்கு வரவில்லை என பெற்றோர்கள் தேடிய நிலையில், அவ்வழியாகச் சென்றவர்கள் கரையின் மேலே மூவரது உடைகள் இருந்ததைக் கண்டு ஊரணியின் உள்ளே பார்க்கும் பொழுது ஒருவரின் உடல் மட்டும் மிதந்து கொண்டிருந்துள்ளது. இதனைப்பார்த்தவர்கள் ஊர்மக்களிடம் தகவல் தெரிவித்துள்ளனர்.