தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கோவை: ரயில் தண்டவாளத்தில் கிடந்த உடல்கள்.. ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் தற்கொலை! - suicide in Coimbatore

suicide in Coimbatore: கோவை, போத்தனூரில் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த தாய், மகன், மகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவையில் ரயில் முன் மீது பாய்ந்து ஒரே குடும்பத்தினர் 3 பேர் தற்கொலை
கோவையில் ரயில் முன் மீது பாய்ந்து ஒரே குடும்பத்தினர் 3 பேர் தற்கொலை

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 5, 2024, 3:15 PM IST

கோயம்புத்தூர்: போத்தனூரில் ரயில் தண்டவாளத்தின் அருகே 3 பேரின் சடலம் கிடப்பதாக, போத்தனூா் ரயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. தகவலின் அடிப்படையில், சம்பவ இடத்திற்கு வந்த கோவை இருப்புப் பாதை போலீசார் 3 பேரின் சடலங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். தொடா்ந்து அவா்கள் யாா், எந்த ஊரைச் சோ்ந்தவா்கள் என்பது குறித்து விசாரணை நடத்தினா்.

விசாரணையில், "சென்னை துரைப்பாகம் பகுதியை சேர்ந்தவர் வரலட்சுமி. இவரது கணவர் விநாயகமூர்த்தி. இவர் கடந்த இரு மாதங்களுக்கு முன்னதாக வீட்டை விட்டு வெளியேறி மாயமாகியுள்ளார். மாயமான தனது கணவரை பல இடங்களிலும் தேடி கிடைக்காத நிலையில், வரலட்சுமி வறுமையில் இருந்ததாக கூறப்படுகிறது.

இதனால், மன நிம்மதிக்காக கோவை பகுதியில் உள்ள கோவிலுக்கு செல்வதாக உறவினர்களிடம் கூறிவிட்டு
மகன் யுவராஜ் (16) மற்றும் மகள் ஜனனி (15) ஆகியோருடன் கோவை வந்துள்ளார். இந்நிலையில், நேற்று போத்தனூா் ரயில் நிலையத்தில் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.

கோவை சென்ற வரலட்சுமி உள்ளிட்ட மூவரும் சென்னை திரும்பாததால் கடந்த 29 அம் தேதி அவரது உறவினர்கள் துரைப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இது குறித்த துரைப்பாக்கம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தது குறிப்பிடத்தக்கது. கோவையில் தாய் மற்றும் குழந்தைகள் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தற்கொலை தீர்வல்ல: சொந்தக் காரணங்களாலோ அல்லது மன அழுத்தத்தின் காரணமாகவோ தற்கொலை எண்ணம் தோன்றினால் மாநில தற்கொலை தடுப்பு உதவி எண் 104 அல்லது சிநேகா உதவி எண் 044-24640050 அழையுங்கள். இணைய வழித் தொடர்புக்கு 022-25521111 என்கிற எண்ணில் தொடர்பு கொள்ளுங்கள்.

மேலும், மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ள help@snehaindia.org எனும் மின்னஞ்சல் முகவரியிலும், நேரில் தொடர்புகொள்ள சிநேகா பவுண்டேஷன் ட்ரஸ்ட் 11, பூங்கா சாலை (பார்க் வியூ ரோடு), ஆர்.ஏ.புரம் சென்னை - 600028 என்கிற முகவரிக்கு நேரில் சென்று தொடர்பு கொள்ளலாம்.

இதையும் படிங்க:நேர்மையான மத்திய அமைச்சர்கள்! குண்டூசியை கூட விட்டுவைக்காத தமிழக அமைச்சர்கள்? - அண்ணாமலை சாடல் - Lok Sabha Election 2024

ABOUT THE AUTHOR

...view details