தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம்; தமிழ்நாடு அரசுக்கு முக்கிய உத்தரவிட்ட உயர் நீதிமன்றம்! - Thoothukudi firing incident

Thoothukudi incident: தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் தொடர்புடைய அதிகாரிகளுக்கு எதிராக எடுக்கப்பட்ட துறை ரீதியான நடவடிக்கைகளின் விவரங்களை, மனுதாரர் தரப்பிற்கு அறிக்கையாக வழங்க தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 27, 2024, 7:43 PM IST

சென்னை: தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கை தேசிய மனித உரிமைகள் ஆணையம் முடித்து வைத்ததை எதிர்த்து, மனித உரிமை ஆர்வலர் ஹென்றி திபேன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர் மற்றும் என்.செந்தில்குமார் அமர்வில் இன்று (மார்ச் 27) மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசுத் தரப்பில் அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் ரவீந்திரன் ஆஜராகி, வழக்கின் விசாரணையை மக்களவை தேர்தலுக்குப் பிறகு தள்ளிவைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். மனுதாரர் ஹென்றி திபேன், துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் தொடர்புடைய அதிகாரிகள் மீது எடுக்கப்பட்ட துறை ரீதியான நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கையை தற்போது வரை தனக்கு வழங்கவில்லை என்று வாதிட்டார்.

இதனையடுத்து, அறிக்கை தயாராகி விட்டதாகவும், அடுத்த விசாரணையில் சமர்பிப்பதாகவும் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் தொடர்புடைய அதிகாரிகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் விவரங்களை மனுதாரருக்கு அறிக்கையாக வழங்க உத்தரவிட்டு, விசாரணையை ஏப்ரல் 25ஆம் தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இதையும் படிங்க:“வேட்பாளர்களின் மருத்துவச் சான்றிதழை கேட்க முடியாது” - தேர்தல் ஆணையம் பதில்! - CANDIDATE HEALTH CERTIFICATE

ABOUT THE AUTHOR

...view details