தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அமைச்சர் செந்தில் பாலாஜி இருக்கைக்கு பின்னால் யார் நிற்பது.. திமுகவினரிடையே தள்ளுமுள்ளு!

கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் நடைபெற்ற ஆய்வுக்கூட்டத்திற்கு பின், செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் இருக்கைக்கு பின்னால் யார் நிற்பது என்பதில் திமுகவினரிடையே லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

By ETV Bharat Tamil Nadu Team

Published : 5 hours ago

அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர் சந்திப்பு
அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர் சந்திப்பு (Credits - ETV Bharat Tamil Nadu)

கோயம்புத்தூர்:கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் குறித்தான ஆலோசனைக் கூட்டம் அனைத்து துறை அதிகாரிகளுடன் இன்று நடைபெற்றது.

இக்கூட்டம் முடிந்து செய்தியாளர்களைச் சந்திப்பதற்காக ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அப்போது அமைச்சர் செந்தில் பாலாஜி அமர்வதற்கான இருக்கையும் போடப்பட்டிருந்தது. இந்நிலையில் அமைச்சரின் இருக்கைக்கு பின்புறம் யார் நிற்பது என்பது தொடர்பாக திமுகவினர் மத்தியில் லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இதையும் படிங்க :மின்தடை ஏற்படுவதற்கு இதுதான் காரணமா? -அமைச்சர் செந்தில் பாலாஜி சொல்வதென்ன?

ஆய்வுக்கூட்டம் முடிந்தபின் அமைச்சர் செந்தில் பாலாஜி முதல் தளத்திலிருந்து கீழ் தளத்திற்கு வந்த போது தொண்டர்கள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையர் மற்றும் மாநகர காவல் ஆணையர் உள்ளிட்ட அதிகாரிகள் சிக்கிக் கொண்டனர். அவர்களை பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் மீட்டு செய்தியாளர்கள் சந்திப்பில் பங்கேற்க உதவி செய்தனர்.

அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி (Credits - ETV Bharat Tamilnadu)

இதையும் படிங்க :சென்னையில் வெளுத்து வாங்கும் கனமழை.. பொதுமக்கள் அரசுக்கு வைக்கும் கோரிக்கை என்ன?

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து, வடகிழக்கு பருவமழை காலம் தொடங்கி உள்ள நிலையில், தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை குறித்து அரசு சார்பில் எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் பருவமழையை சந்திக்க மின்சாரத் துறை தயாராக இருப்பதாகவும், மின் விநியோகம் சீராக வழங்க மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்தும் பேசினார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே க்ளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details