தேனி:தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே கடமலைகுண்டு பகுதிக்கு உட்பட்ட மூலகடையை சேர்ந்தவர் சௌமியா. இவர் கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் பண தேவக்காக கோபிநாத் ஜஸ்டின், என்பவரின் நகை அடகு கடையில் தனது 75 பவுன் நகைகளை 5 பிரிவாக அடகு வைத்து 24 லட்சம் பணம் பெற்றுள்ளார்.
இதன் பின்னர் 3 மாதம் கழித்து தான் அடகு வைத்த நகைகளை மீட்டெடுக்க சென்ற போது, 'தனது மனைவியின் பெயரில் நகைகளை அடகு வைத்திருப்பதாகவும் தற்போது தர முடியாது என்று கோபிநாத் ஜஸ்டின், தொடர்ந்து காலம் தாழ்த்தி வந்ததாக கூறப்படுகிறது. இறுதியில் நகை முழுவதும் ஏலம் போய்விட்டது என தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க:ஐசியுவில் சிகிச்சைப் பெற்ற பலருக்கு ஒரே சிரஞ்சியில் ஊசி .. அரசு மருத்துவமனை செவிலியர் சஸ்பெண்ட்!
இதற்கிடையே கடலைமலைக்குண்டுவைச் சேர்ந்த திமுக வடக்கு ஒன்றிய துணை செயலாளர் சேர்மலை, சௌமியா வீட்டிற்குச் சென்று கொலை மிரட்டல் விடுத்தாகவும், நகை அடகு வைத்திருக்கும் கடையில் நானும் ஜஸ்டினும் பார்ட்னர் எனவும் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.
இதனையடுத்து கடமலைகுண்டு போலீசார் விசாரணைக்கு அழைத்த போது போலியாக நகை ஏலம் சீட்டு காண்பித்து விசாரணைக்கு வராமல் தன்னிடம் 2.5 லட்சம் பணம் தருவதாக கூறி வழக்கை வாபஸ் வாங்க வேண்டும் என மிரட்டியதாகச் சௌமியா குற்றச்சாட்டு தெரிவித்தார். தொடர்ந்து இந்த வழக்கில் நியாயம் கிடைக்க வேண்டும் என கூறி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.