தேனி:தேனி மாவட்டம் போடி ராசிங்கபுரத்தைச் சேர்ந்த சேதுபதி என்ற நடராஜன் என்பவர் புதிய வீடு கட்டி வந்துள்ளார். அப்போது வீடு கட்ட போதிய பணம் இல்லாத நிலையில் என்ன செய்வதென்று தெரியாமல் சுற்றித் திரிந்த நடராஜன்,
கடந்த 2014ஆம் ஆண்டு அன்று நடராஜன் வசிக்கும் அதே பகுதியில் வீட்டில் தனியாக இருந்த சுருளிமல்லம்மாள் (வயது 85) என்ற மூதாட்டியை கீழே தள்ளிவிட்டு அவரின் முகத்தை தலையணையால் அழுத்தி மூச்சை நிறுத்தி கொலை செய்துள்ளார்.
மேலும் அவர் அணிந்திருந்த 3 சவரன் நகையை பறித்துச் சென்றுள்ளார். அதே ஆண்டு குப்பிநாயக்கன்பட்டி பகுதியில் வீட்டில் தனியாக இருந்த தங்கம்மாள் (வயது 77) என்ற மூதாட்டியையும் கொலை செய்துவிட்டு, அவர் அவர் அணிந்திருந்த கவரிங் நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளார்.
இந்த இரண்டு மூதாட்டிகளின் இறப்பில் மர்மம் இருப்பதாக அவர்களது உறவினர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் போடி தாலுகா காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அப்போது போடி ராசிங்கபுரத்தைச் சேர்ந்த சேதுபதி என்ற நாகராஜன் கொலை செய்து நகைகளைப் பறித்துச் சென்றது தெரிய வந்தது.