தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மனைவியை வெளிநாட்டிற்கு அனுப்பிய தரகர் கொலை.. கணவருக்கு ஆயுள் தண்டனை! - Theni Murder case - THENI MURDER CASE

மனைவியை வெளிநாட்டிற்கு அனுப்பிய விவகாரத்தில் ஏஜெண்டை கொலை செய்து தோட்டத்தில் புதைத்த கணவருக்கு ஆயுள் தண்டனை விதித்து தேனி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

தேனி நீதிமன்றம்
தேனி நீதிமன்றம் (Credit - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 2, 2024, 11:08 AM IST

தேனி:தேனி மாவட்டம், சின்னமனூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட சீலையம்பட்டியைச் சேர்ந்தவர் அஜ்மல் கான் (40). இவரது மனைவி ஆஷாபானுவை, சிதம்பரத்தைச் சேர்ந்த கருணாநிதி என்ற தரகர் மூலம் கடந்த 2018ஆம் ஆண்டு குவைத் நாட்டிற்கு வேலைக்கு அனுப்பி வைத்துள்ளார்.

வெளிநாட்டிற்கு வேலைக்குச் சென்ற ஆஷாபானு, ஓராண்டாக கணவர் அஜ்மல் கானுக்கு சம்பளம் அனுப்பி வைத்திருந்த நிலையில், திடீரென 2019 முதல் பணம் அனுப்பாமல் தலைமறைவாகியுள்ளார். இந்த நிலையில், மனைவி ஆஷாபானு குறித்து கணவர் அஜ்மல் கான் விசாரித்ததில், தரகர் கருணாநிதியின் மகன் வினோத் குமாருடன் மனைவி தொடர்பில் இருந்ததால், வெளிநாட்டில் இருந்து பணம் அனுப்பவில்லை என தெரியவந்ததாகக் கூறப்படுகிறது.

இதையும் படிங்க: சிறுமியை கிண்டல் செய்த இளைஞர்.. தட்டிக் கேட்ட தந்தை கத்தியால் குத்தி கொலை! - புதுக்கோட்டையில் பரபரப்பு!

அதனைத் தொடர்ந்து தரகர் கருணாநிதியை வெளிநாட்டு வேலைக்கு ஆள் எடுப்பதாகக் கூறி சிதம்பரத்திலிருந்து சின்னமனூருக்கு வரவழைத்து, தோட்டத்திற்கு அழைத்துச் சென்று மண்வெட்டி, தடியால் அடித்துக் கொலை செய்து, அவரது தோட்டத்திலேயே புதைத்துள்ளார். இந்த நிலையில், கருணாநிதியின் சகோதரர் வினோத் குமார் கொடுத்த புகாரின் அடிப்படையில், சின்னமனூர் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

அப்பொழுது, கருணாநிதியை அஜ்மல் கான் அடித்துக் கொலை செய்து தோட்டத்தில் புதைத்தது தெரிய வந்தது. அதைத் தொடர்ந்து, சின்னமனூர் போலீசார் அஜ்மல் கான் மீது கொலை வழக்குப்பதிவு செய்து, புலன் விசாரணை மேற்கொண்டு, அதற்கான விசாரணை அறிக்கையை தேனி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் உள்ள கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.

தற்போது இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடைபெற்று வந்தது. இந்த நிலையில் நேற்று இந்த வழக்கு விசாரணை முடிவுற்று சாட்சியங்கள் மற்றும் ஆதாரங்களின் அடிப்படையில், அஜ்மல் கான் கொலை குற்றம் புரிந்தது உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, குற்றவாளி அஜ்மல் கானுக்கு ஆயுள் தண்டனை விதித்து கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி கோபிநாத் தீர்ப்பு வழங்கியுள்ளார். அதனைத் தொடர்ந்து கொலைக் குற்றவாளி அஜ்மல் கானை மதுரை மத்திய சிறையில் அடைக்க போலீசார் பாதுகாப்புடன் அழைத்துச் சென்றது குறிப்பிடத்தக்கது.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே க்ளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details