திண்டுக்கல்:திண்டுக்கல் அருகே காப்பிளியப்பட்டியைச் சேர்ந்தவர் பழனிசாமி. இவரது மகன் தீன தயாள வர்மன் (32). இவர் செல்போன் சர்வீஸ் செய்யும் கடை நடத்தி வருகிறார். இவருக்கு நாகஜோதி என்ற மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில், இவர் மீது 2016 ஆம் ஆண்டு நடந்த கொலையில் தொடர்பு மற்றும் கட்டப்பஞ்சாயத்து வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில், மா.மு.கோவிலூர் அருகே உள்ள அம்மா குளக்கரையில் இன்று (செப்.25) மதியம் பட்டப்பகலில் தீன தயாள வர்மனை அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் தலை மற்றும் உடல் என பல இடங்களில் வெட்டி படுகொலை செய்துள்ளனர்.