தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

2016-19 ஆம் ஆண்டுகளில் சிறைகளில் நடந்த முறைகேடுகள் விசாரிக்கப்பட வேண்டும்...உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு! - HC MDU BENCH PRISON FRAUD ENQUIRY

2016-19 ஆம் ஆண்டுகளில் சிறைகளில் நடந்த முறைகேடுகள் விசாரிக்கப்பட வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

உயர் நீதிமன்ற மதுரை கிளை
உயர் நீதிமன்ற மதுரை கிளை (Image credits-Etv Bharat Tamilnadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : 15 hours ago

மதுரை: 2016-19 ஆம் ஆண்டுகளில் சிறைகளில் நடந்த முறைகேடுகள் விசாரிக்கப்பட வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரை மத்திய சிறையில் 2016 முதல் 2021 வரை சிறைக்கைதிகள் பொருட்கள் தயாரிக்க மூலப்பொருட்கள் வாங்கியதிலும், உற்பத்தி செய்த பொருட்களை விற்பனை செய்ததிலும் ரூ.1.63 கோடி அளவுக்கு முறைகேடு நடைபெற்றிருப்பதாக புகார் அளிக்கப்பட்டது. இந்த முறைகேடு தொடர்பாக மதுரை சிறைத்துறை எஸ்பி உள்பட 11 பேர் மீது மதுரை லஞ்ச ஒழிப்பு போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். கடலூர் சிறைத்துறை எஸ்பி எம்.ஊர்மிளா உள்ளிட்ட 11 பேர் மீது மதுரை லஞ்ச ஒழிப்பு போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி சிறைத்துறை எஸ்பி ஊர்மிளா, சங்கரசுப்பு, ஸ்ரீனிவாசன், சாந்தி, தனலெட்சுமி, வெங்கடேஸ்வரி ஆகியோர் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனுவினைத் தாக்கல் செய்தார். இதில் சிறைத்துறை எஸ்பி ஊர்மிளா தாக்கல் செய்துள்ள மனுவில் 2016-2021 ஆம் ஆண்டுகளில் சிறையில் தொழிற்கூடத்தின் மேற்பார்வை செய்பவர்கள் கூடுதல் கண்காணிப்பாளர் மற்றும் சிறை அலுவலர்,"என குறிப்பிட்டிருக்கிறார்.

இதையும் படிங்க:நான் ரெடி...நீங்க ரெடியா? களம் காணத் தயாராகும் ஜல்லிக்கட்டு காளைகள்!

இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்,"தற்போது தான் 12 சாட்சிகள் விசாரணை செய்யப்பட்டுள்ளனர். 52 ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இந்த வழக்கு ஒரு முனை மட்டுமே. அரசுக்கு ஏற்பட்ட இழப்பு குறித்து இன்னமும் கண்டறியப்பட வேண்டி இருக்கிறது. எனவே, 2016-2019 ஆம் ஆண்டுகளில் சிறைகளில் நடந்த முறைகேடு குறித்து மேலும் விசாரிக்கப்பட வேண்டும். இந்த விவகாரத்தில் அதிக பொது நலம் இருப்பதால், விசாரணை அதிகாரி சுதந்திரமாகவும் நேர்மையாகவும் செயல்பட வேண்டும்.

சிறைகளில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்த விசாரணையை உயர்நீதிமன்றம் கண்காணித்து வருகிறது. வழக்கு விசாரணையும் முக்கிய நிலையில் இருப்பதால் இந்நேரத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஜாமின் வழங்குவது வழக்கு விசாரணையை பாதிக்கும். ஆகவே ஜாமீன் கோரிய மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன,"என உத்தரவிட்டார்.

ABOUT THE AUTHOR

...view details