வேலூர்: வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த சின்ன மிட்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பூஜா(21) இவருக்கு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் ஆன நிலையில், தந்தையின் குடும்ப அட்டையில் இருந்து தனது பெயரை நீக்கி, கணவரின் குடும்ப அட்டையில் சேர்ப்பதற்காக இ-சேவை மையத்தில் புதிய குடும்ப அட்டை வேண்டி விண்ணப்பித்துள்ளார்.
இந்நிலையில், பூஜாவிற்கு அதிர்ச்சி தரும் வகையில் தகவல் வந்திருக்கிறது. அதில், பூஜா இறந்துவிட்டதாகவும், பூஜாவின் ஆதார் எண் பிளாக் ஆகி இருப்பதாகவும் தகவல் வந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த பூஜா தனது அப்பாவுடன் வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுலகத்தில் இன்று (ஆக 5) நடைபெற்ற குறைதீர் கூட்டத்தில், ஆட்சியர் சுப்புலெட்சுமியிடம் மனு அளித்து இறப்பு பதிவேட்டில் இருந்து பெயரை நீக்க, புதிய குடும்ப அட்டை வழங்கும்படி கேட்டுக்கொண்டார்.