தஞ்சாவூர்:தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின்படி குற்ற செயல்களை தடுக்கும் பொருட்டு அனைத்து உட்கோட்ட காவல் பகுதிகளிலும் சுழற்சி அடிப்படையில் தனிப்படைகள் அமைத்து தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதன் அடிப்படையில் ஜனவரி 21ஆம் தேதி பட்டுக்கோட்டை மற்றும் ஒரத்தநாடு காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதிகளான சாமியார் மடம் அருகே உள்ள ஒரு பழக்கடை, கொண்டிக்குளம், உதயசூரியபுரம், அரிசி மண்டி மற்றும் ஆலடிக்குமுளை ஆகிய பகுதிகளில் உள்ள செல்போன் கடைகளில் அடையாளம் தெரியாத நபர்கள் இரு சக்கர வாகனத்தில் சென்று, கடைகளை உடைத்து தொடர் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இதனால் பட்டுக்கோட்டை நகரம், தாலுக்கா மற்றும் வாட்டாதிக்கோட்டை போன்ற காவல் நிலையங்களில் கடைகளின் உரிமையாளர்கள் தொடர் புகார் அளித்தனர். அந்த புகார்களின் அடிப்படையில் குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டது.
மேற்படி வழக்கினை பட்டுக்கோட்டை துணைக் காவல் கண்காணிப்பாளர் உத்தரவின்படி பட்டுக்கோட்டை காவல் ஆய்வாளர் நசீர் மேற்பார்வையில் பட்டுக்கோட்டை தனிப்படை காவல் உதவி ஆய்வாளர் ராம்குமார், தலைமையிலான காவல்துறையினர் கொள்ளைச் சம்பவம் நடந்த இடத்தில் கிடைத்த தடயங்கள் சேகரித்தனர். பின் சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து முதற்கட்ட விசாரணையை நடத்தனர். இதையடுத்து போலீசார் சம்பவம் குறித்து விரிவான விசாரணையில் ஈடுப்பட்டு வந்தனர்.