தென்காசி: தென்காசி மக்களவைத் தொகுதியில் திமுக வேட்பாளர் ராணி ஸ்ரீ குமார் அதிமுக வேட்பாளர் கிருஷ்ணசாமியை விட 1,96,199 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
இந்திய தேர்தல் ஆணையத்தின் இணையதள விபரம்..
வ.எண் | வேட்பாளர் | கட்சி | பெற்ற வாக்குகள் |
1 | ராணி ஸ்ரீ குமார் | திமுக | 4,25,679 |
2 | கிருஷ்ணசாமி | அதிமுக | 2,29,480 |
3 | ஜான் பாண்டியன் | பாஜக | 2,08,825 |
4 | இசை மதிவண்ணன் | நாதக | 1,30,335 |
- 5 மணி நிலவரப்படி தென்காசி மக்களவைத் தொகுதியில் திமுக வேட்பாளர் ராணி ஸ்ரீ குமார் 367065 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் கிருஷ்ணசாமி 196197 வாக்குகளும், பாஜக சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் ஜான் பாண்டியன் 172127 வாக்குகளும் மற்றும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் இசை மதிவண்ணன் 109050 வாக்குகளும் பெற்றுள்ளனர். தற்போது திமுக வேட்பாளர் ராணி ஸ்ரீ குமார் அதிமுக வேட்பாளர் கிருஷ்ணசாமியை விட 170858 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.
- 4 மணி நிலவரப்படி,தென்காசி மக்களவைத் தொகுதியில் திமுக வேட்பாளர் ராணி ஸ்ரீ குமார் 309069 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் கிருஷ்ணசாமி 168041 வாக்குகளும், பாஜக சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் ஜான் பாண்டியன் 147197 வாக்குகளும் மற்றும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் இசை மதிவண்ணன் 91058 வாக்குகளும் பெற்றுள்ளார். தற்போது திமுக வேட்பாளர் ராணி ஸ்ரீ குமார் அதிமுக வேட்பாளர் கிருஷ்ணசாமியை விட 141028 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.
- தென்காசி மக்களவைத் தொகுதியில் திமுக வேட்பாளர் ராணி ஸ்ரீ குமார் 264337 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் கிருஷ்ணசாமி 143896 வாக்குகளும், பாஜக சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் ஜான் பாண்டியன் 125212 வாக்குகளும் மற்றும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் இசை மதிவண்ணன் 77018 வாக்குகளும் பெற்றுள்ளார். - 3.35pm நிலவரம்.
இந்தியா கூட்டணியில் இந்த முறையும் இங்கு திமுகவே களமிறங்கி உள்ளது. அக்கட்சியின் நீண்டகால உறுப்பினரும், அரசு மருத்துவருமான ராணி ஸ்ரீகுமார் திமுக சார்பில் போட்டியிடுகிறார். சங்கரன்கோவிலை சேர்ந்த இவரது கணவர் ஸ்ரீகுமார், திமுக விவசாய அணி துணை அமைப்பாளராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.