தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

“வாக்கு வங்கியை பலப்படுத்த 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டி” - தெலுகு சமுதாய அமைப்பு முடிவு! - telugu movement

Telugu movement: 2026 சட்டமன்றத் தேர்தலில் தெலுங்கு மக்களை ஒன்றிணைத்து வாக்கு வங்கியை பலப்படுத்த தேர்தலில் போட்டியிட முடிவு செய்துள்ளோம் என தெலுகு சமுதாய அமைப்புகள் மற்றும் நாயுடு ஐக்கிய கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் அனந்தராமன் தெரிவித்துள்ளார்.

தெலுகு சமுதாய கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் அனந்தராமன்
தெலுகு சமுதாய கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் அனந்தராமன் (photo Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 1, 2024, 9:56 PM IST

Updated : Sep 1, 2024, 10:43 PM IST

திருச்சி: தமிழகத்தில் சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று தமிழக அரசுக்கு தெலுகு சமுதாய அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

தெலுகு சமுதாய கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் அனந்தராமன் பேட்டி (Credits - ETV Bharat Tamil Nadu)

தமிழ்நாடு தெலுகு சமுதாய அமைப்புகள் மற்றும் நாயுடு ஐக்கிய கூட்டமைப்பின் சார்பில், திருச்சி பிரஸ் கிளப்பில், அமைப்பின் கூட்டமைப்பு பொதுச் செயலாளர் அனந்தராமன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது, “விகிதாச்சார இடஒதுக்கீடு மற்றும் வேலை வாய்ப்புகளை உறுதி செய்ய தமிழகத்தில் சாதி வாரியான மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கான மத்திய அரசின் டபிள்யூஎஸ் இடஒதுக்கீட்டை மாநில அரசு அமல்படுத்த வேண்டும்

தெலுங்கு மொழி சிறுபான்மை சான்றிதழ் பெறுவதில் தமிழக அரசின் சரியான வழிகாட்டுதல் இல்லாததால், பல்வேறு மாவட்ட தாசில்தார்கள் இடையூறு தருகின்றனர். அதனை சரி செய்ய வேண்டும். ராணி மங்கம்மாள் பெயரை மதுரை தமுக்கம் மைதானத்திற்கு வைக்க வேண்டும் என்று பல ஆண்டு காலமாக கோரிக்கை வைத்துள்ளோம். அது அரசின் காதுகளில் விழவில்லை.

மொழிவழி சிறுபான்மையினர் ஆணையம் அமைக்க வேண்டும் என்றும், மொழி சிறுபான்மையினரை பிரித்தாளும் வகையில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியது குறித்து அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். தெலுங்கு மக்கள் பற்றி சீமான் பேசியதற்கு கண்டனம் தெரிவிக்கிறோம். திருச்சியில் ராணி மங்கம்மாளுக்கு சிலை வைக்க வேண்டும்.

தமிழகத்தில் 30 சதவீதம் தெலுங்கு மக்கள் உள்ளனர். அரசியல் சாசன சட்டப்படி எங்களுடைய கோரிக்கைகளை நீதித்துறை மூலமாகவும், 2026 சட்டமன்றத் தேர்தலில் தெலுங்கு மக்களை ஒன்றிணைத்து வாக்கு வங்கியை பலப்படுத்த தேர்தலில் போட்டியிட முடிவு செய்துள்ளோம்” இவ்வாறு அவர் கூறினார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க:அமெரிக்காவில் உள்ள சிவகாமி அம்மன் சிலையை மீட்க வேண்டும்.. பொன் மாணிக்கவேல் வேண்டுகோள்!

Last Updated : Sep 1, 2024, 10:43 PM IST

ABOUT THE AUTHOR

...view details