சென்னை: சென்னை: புதிய கல்விக் கொள்கையை ஏற்கும் வரை தமிழகத்துக்கு நிதி தர முடியாது என்று மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் உத்தரப் பிரதேசத்தின் வாரணாசியில் நடைபெற்ற 'காசி தமிழ் சங்கமம்' நிகழ்வின்போது செய்தியாளர் சந்திப்பில் நேற்று கூறியிருந்தார்.
மத்திய அமைச்சரின் இந்த கருத்துக்கு தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், தவெக தலைவர் விஜய் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில், தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினும், மத்திய கல்வித்துறை அமைச்சரின் இந்தக் கருத்தை வன்மையாக கண்டித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள பதிவில், 'தமிழ்நாட்டில் மும்மொழிக் கொள்கையை ஏற்க முடியாது என்பதை நாம் அரசியலால் தூண்டப்பட்டு (Politically Motivated) பேசுவதாக ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் சொல்லி உள்ளதை வன்மையாக கண்டிக்கிறோம்.