சென்னை:தமிழ்நாட்டில் மாநிலப் பாடத்திட்டத்தில் படிக்கும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மார்ச் 1ஆம் தேதி தொடங்கி மார்ச் 22ஆம் தேதி நிறைவு பெற்றது. இந்த தேர்வினை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 7 ஆயிரத்து 534 மேல்நிலைப் பள்ளிகளில் படித்த, 7 லட்சத்து 72 ஆயிரத்து 360 மாணவர்கள் மற்றும் தனித்தேர்வர்கள் 8 ஆயிரத்து 190 பேர் என மொத்தம் 7 லட்சத்து 80 ஆயிரத்து 550 மாணவர்கள் எழுதி உள்ளனர். இதனையடுத்து மாணவர்களின் விடைத்தாள் திருத்தும் கடந்த மாதம் 2 ஆம் தேதியில் இருந்து 13 ஆம் தேதி வரை நடைபெற்றது.
இந்தநிலையில் பள்ளிக்கல்வித்துறை ஏற்கனவே அறிவித்தபடி, மே 6ஆம் தேதியான இன்று காலை 9.30 மணிக்கு 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகவுள்ளன. இது குறித்து பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, "மார்ச் 2024-ல் நடைபெற்ற 2023-2024ஆம் கல்வியாண்டிற்கான (மேல்நிலை இரண்டாமாண்டு) 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் 06.05.2024 (திங்கட்கிழமை) அன்று பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகத்தில் அமைந்துள்ள அரசுத் தேர்வுகள் இயக்ககத்தில் காலை 9.30 மணிக்கு வெளியிடப்படவுள்ளது. மாணவர்கள் தங்கள் தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in, www.dge.tn.gov.in இணையதள முகவரியில் அறிந்து கொள்ளலாம்.