தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"மத்திய அரசு மைனாரிட்டி அரசு அல்ல; பலமான அரசு" - தமிழிசை செளந்தரராஜன் கருத்து! - Tamilisai Soundararajan

Tamilisai Soundararajan: திருச்செந்தூரில் சாமி தரிசனத்துக்குப் பின், மத்திய அரசு மைனாரிட்டி அரசு அல்ல, பலமான அரசு என முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கருத்து தெரிவித்துள்ளார்.

தமிழிசை சௌந்தரராஜன் புகைப்படம்
தமிழிசை சௌந்தரராஜன் (Credits - Tamilisai Soundararajan X Page, ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 2, 2024, 6:32 PM IST

தூத்துக்குடி: தெலங்கனா முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மூலவர் சண்முகர், பெருமாள், சத்ரு சம்ஹார மூர்த்தி சன்னதியில் சாமி தரிசனம் செய்தார்.

தமிழிசை சௌந்தரராஜன் பேட்டி (Credits - ETV Bharat Tamil Nadu)

பின்னர் திருச்செந்தூர் தனியார் விடுதியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு பெண்கள், முதியவர்கள் என ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். அவர்களுக்கு தகுந்த ஏற்பாடுகளை நிர்வாகம் செய்யவில்லை.

ஆமை வேகத்தில் கட்டுமானப் பணிகள் நடைபெறுவதால், அதிகமாக வரும் கூட்டத்தால் பக்தர்களுக்கு இடையூறு ஏற்படுகிறது. கோயில் கடலில் தற்போது ராட்சத அலைகள் வருவதால் கடலில் குளிக்கும்போது பக்தர்களுக்கு கால் முறிவு ஏற்படுகிறது. இந்த இடத்தில் ராட்சத அலைகள் ஏன் ஏற்படுகிறது என்று விஞ்ஞானப்பூர்வமாக ஆராய்ந்து அதற்கான தீர்வை அரசு ஏற்படுத்த வேண்டும்.

மழைக் காலத்தில் பாதிக்கப்பட்ட முக்காணி, ஏரல் ஆற்றுப்பாலம் இன்னும் சரி செய்யப்படவில்லை. அவைகள் மழைக்காலத்திற்கு முன்பு விரைவில் சரிசெய்ய வேண்டும். மேலும், கடந்த ஆண்டு மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட ரயில்வே தண்டவாளங்களை சீரமைக்கும் பணியை ரயில்வே துறை சரி செய்து விட்டார்கள். தமிழக பாஜக தலைவராக வர வாய்ப்புள்ளத என்ற கேள்விக்கு, பாஜகவில் பதவியை எதிர்பார்த்தோ, வேறு எதையும் எதிர்பார்த்தோ நான் இருக்கவில்லை.

மக்களவையில் மத்திய அரசை மைனாரிட்டி அரசு என கூறுவது தொடர்பான கேள்விக்கு, மத்திய அரசு மைனாரிட்டி அரசு அல்ல; பலமான அரசு. தேசிய ஜனநாயக கூட்டணியில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இருந்து எம்பிக்கள் சென்றிருந்தால், அவர்கள் தமிழகத்திற்கு பல பணிகளை முன்னெடுத்துச் சென்றிருப்பார்கள்.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இருந்து சென்ற இந்தியா கூட்டணி 40 எம்பிக்களால் என்ன பலன்? கூச்சலிடவும் சத்தம் போடுவதுதான் அவர்கள் பணியாக இருக்கும். தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் விலை உயர்வை பற்றி கேட்டதற்கு, பதில் அளிக்காமல் சென்றுவிட்டார்.

இதையும் படிங்க:சென்னையில் "மெட்ராஸ் மெட்ராஸ்" மகளிர் கார் பேரணி.. எப்போது தெரியுமா? - chennai women car rally

ABOUT THE AUTHOR

...view details